25 அக்டோபர் 2012

எம் ஜி ஆர் தான் என்னை சுட்டார்....MR ராதா

எம் ஜி ஆர் சுடப்பட்டதும் தெரியும்,MR  ராதாவுக்கு தண்டனை கிடைத்ததும் தெரியும்....ஆனால் MR ராதா வாக்குமூலத்தையும் தெரிந்துகொள்வோமா!இனி பிளாஷ்பேக் ...........
 இதன் முந்தய பதிவு :http://nkshajamydeen.blogspot.com/2012/10/blog-post_21.html எம்.ஜி.ஆரை சுட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா வாக்கு மூலம் கொடுத்தார். "எம். ஜி.ஆர்.தான் என்னை சுட்டார். நான் தற்காப்புக்காக திருப்பி சுட்டேன்" என்று கூறினார்....

அவர் அளித்த வாக்குமூலம் ....

"படம் எடுப்பது பற்றி, வாசு என்னிடம் பேசினார். "எனக்கு படம் எடுக்கும் யோசனை கிடையாது. கோவை பார்ட்டி இருப்பதாக ஒரு புரோக்கர் சொன்னார். நான் வேண்டுமானால் அந்த பார்ட்டியிடம் பேசுகிறேன்" என்றேன். அந்த தேதி எனக்கு ஞாபகம் இல்லை. அதன்பிறகு ஜனவரி 11ந்தேதி சம்பவம் நடந்த நாளுக்கு முன் தினம், வாசு வந்து என்னிடம் கோவை பார்ட்டி பற்றி கேட்டார். 

"வந்தால் சொல்கிறேன்" என்று நான் சொன்னேன். பிறகு 12ந்தேதி வாசு வந்து, "எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடு. ஒரு வார்த்தை சொல்லு. அப்போதுதான் எம்.ஜி.ஆர். என்னை நம்புவார். இல்லாவிட்டால் நம்பமாட்டார்" என்று கூறினார்....

நானும் வாசுவும் எம் ஜி ஆர் வீட்டிற்கு சென்றோம்....எம்.ஜி.ஆர். வீட்டின் முன் அறையில் உட்கார்ந்தோம். பிறகு நான் நடந்து கொண்டு இருந்தேன். அப்போது வந்த எம்.ஜி.ஆர்., என்னிடம் "என்ன அண்ணே, காமராஜரைக் கொல்ல நான் சதி செய்வதாக முன்னாலே பத்திரிகையில் எழுதி இருக்கீங்க. 

அன்று முதல், என்னையும் சுட்டுவிடுவதாக சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நான் மட்டும் என்ன? நானும் சுட்டுடுவேன் என்றுதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்" என்று கூறினார். நான் என்பாட்டுக்கு "வாக்" பண்ணிக்கொண்டு (நடந்து கொண்டு) இருந்தேன். பேப்பரில் உள்ளதைப் பேசுகிறானே விரோதமா என்னை நினைச்சுக்கிட்டு இருக்கிறானே" என்று நினைத்துக்கொண்டேன். 

"ஏதோ அவன் (வாசு) கூப்பிட்டானே என்று வந்தேன். நீயும் சுட்டுடுவேன்னு பயமுறுத்தி அசிங்கமாகப் பேசுகிறாய். இது அசிங்கமாக தெரியலையா?" என்று கூறிக் கொண்டு நடந்தேன். உடனே, எம்.ஜி.ஆர். "சுட்டால் என்ன செய்வீங்க?" என்று கேட்டார். உடனே நான், "மனிதன் உயிர் எப்படியும் போகுது. சுட்டுச் செத்தா என்னடா கெட்டுப் போச்சு" என்று திரும்பினேன். நான் திரும்பும்போது, "படார்" என்று ஒரு சப்தம் கேட்டது. 

தலையில் சுத்தியை வைத்து அடித்ததுபோல இருந்தது. நான் அடிபட்ட இடத்தில கையை பொத்திக்கொண்டு அப்படியே நின்றேன். நான் கையை எடுத்தபோது ஒரே ரத்தமாக இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் மெல்ல திரும்பிப் பார்த்தேன். எம்.ஜி.ஆர். கையில் துப்பாக்கி இருந்தது. அப்போது எனக்கு கொஞ்சம் உணர்ச்சி வந்தது. "இவன் நம்மை சுட்டுவிட்டான்" என்று எண்ணினேன். 

எப்படியும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. உடனே, நான் எம்.ஜி.ஆர். கையைப் பிடித்தேன். அப்போது என் கையில் இருந்த ரத்தம் எம்.ஜி.ஆரின் கையிலும், முகத்திலும் பட்டது. துப்பாக்கியை பிடுங்கினேன் அதன் பிறகு என்னுடைய 2 கைகளையும் சேர்த்துக் கொண்டு, எம்.ஜி.ஆர். கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கிச் சுட்டேன். யாரை சுட்டேன் என்று எனக்குத் தெரியாது. 

சூடு அவர் (எம்.ஜி.ஆர்.) மேல் விழுந்து இருக்கலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. இதற்கு அப்புறம் எனக்கு ஒன்றும் சரியாக தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து எவ்வளவு நேரம் என்று சொல்லமுடியாது. இன்னொரு குண்டு என் மீது பாய்ந்தது. ஆனால் யார் சுட்டது என்று சொல்ல இயலாது. இதற்கு அப்புறம் சைதாப்பேட்டை மேம்பாலத்தில் வண்டி போவதுபோல் தெரிந்தது. ஆனால், அது காரா அல்லது கட்டை வண்டியா என்று சரியாகத் தெரியவில்லை. 

சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வரும்போது, "சப்இன்ஸ்பெக்டர் இருந்தால் கூப்பிடச்சொல்லு" என்று சொன்னேன். கார் நிறுத்தப்பட்டது. காருக்குள் யாரோ வந்து என்னைப் பார்த்தார்கள். அப்போது, "எம். ஜி.ஆர். சுட்டுட்டார்" என்று கூறினேன். அப்புறம் என்னால் அதிகம் பேசமுடியவில்லை. உடனே, "அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கள்" என்று கூறினார். 

"இதுபற்றி நாங்கள் எழுதிக் கொள்கிறோம். கையெழுத்து போடுங்கள்" என்று 2 பேப்ப ரிலோ, 4 பேப்பரிலோ கையெழுத்து வாங்கினார்கள். நான் எங்கே கையெழுத்து போட்டேன், யாரிடம் போட்டேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆஸ்பத்திரியில் என்னிடம் வாக்குமூலம் வாங்கியபோது நடந்ததை சொன்னேன். இவ்வாறு எம்.ஆர்.ராதா கூறினார். ..இதனை தொடர்ந்து எம் ஜி ஆர் வீட்டு வேலை ஆட்கள், எம் ஜி ஆர்,வாசு என பலபேர் சாட்சியம் அளித்தார்கள்...

இந்த வழக்கில் செசன்சு நீதிபதி லட்சுமணன் கடந்த 5.11.67ல் தீர்ப்பு கூறினார். அதில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா தற்காப்புக்காகவோ அல்லது தவறுதலாகவோ சுடவில்லை. எம்.ஜி.ஆரை தீர்த்துக்கட்டி விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்.
எனவே, அவரை குற்றவாளி என்று முடிவு செய்கிறேன். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பு கூறுகிறேன்....என தீர்ப்பளித்தார்...

நன்றி: காலச்சுடுகள்...

8 கருத்துகள்:

 1. இந்த சம்பவத்தில் இன்னும் மர்மம் இருப்பதாகவே கூறப்படுகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 2. விஷயம் வேறு மாதிரி போய் இருந்தால் சில உண்மைகள் மேலும் தெரிந்திருக்கும்...

  நன்றி...
  tm5

  பதிலளிநீக்கு
 3. இன்ட்லி Follower Gadget விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும் (http://www.bloggernanban.com/2012/10/blog-post.html) அதே போல் இன்ட்லி ஓட்டுப்பட்டையையும் எடுத்து விடவும்... தளம் திறக்க நேரம் ஆகிறது...
  நன்றி...

  பதிலளிநீக்கு
 4. நன்றி சகோ .இந்த தகவல்கள் எல்லாம் எனக்கு தெரியாது இது நான் பொறக்கறதுக்கு முன்னாடி ..நடந்தது ..சரி எம் ஆர் .ராதாவுக்கு .ஏழு ஆண்டு சிறையில் .இருந்தாரா ? சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராதா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து பின் 5 வருட தண்டனையாக குறைக்கப்பட்டது.. நன்னடத்தை விதிகளின்படி 4 ஆண்டு சிறை வாசத்துக்குப்பின் MR ராதா விடுதலை ஆனார்....நன்றி சகோ....

   நீக்கு
 5. மிகச் சிறந்த நடிகர்.

  என்னவெல்லாமோ நடந்திருக்கிறது.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....