10 நவம்பர் 2012

எவன் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று?!



சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கி இருப்போரின் பட்டியலை இந்திய  அரசியல் வரலாற்றிலயே முதல்முறையாக வெளியிட்டு இருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்...

அவர் வெளியிட்ட கருப்பு பண பதுக்கல் மன்னர்கள் பட்டியல்...


முகேஷ் அம்பானி - ரூ100 கோடி
- அனில் அம்பானி - ரூ100 கோடி
- ரிலையன்ஸ் குழுமம் -ரு200 கோடி
- ரிலையன்ஸ் குழுமத்தில் அங்கம் வகித்த சந்தீப் டான்டன் - ரூ125 கோடி
- சந்தீப் டான்டனின் மனைவியும் காங்கிரஸ் எம்.பியுமான அனு - ரூ125 கோடி
- திருபாய் அம்பானியின் அமனைவி கோகிலாவுக்கு அக்கவுண்ட் இருந்தது. ஆனால் தற்போது பேலன்ஸ் ஏதும் இல்லை
- ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ் கோயல் - ரூ80 கோடி
- டாபர் நிறுவனத்தின் 3 பேர் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு- ரூ25 கோடி
- மோடெக் மென்பொருள் நிறுவனம்- ரூ2,100 கோடி

இது சாம்பிள்தான்....வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தின் எண்ணிக்கை சுமார் 25 லட்சம் கோடி.....!என்ன மலைப்பாக இருக்கா?!இதில் சுவிஸ் வங்கியில் மட்டும் 700 பேரின் 6 ஆயிரம் கோடி பதுக்கப்பட்டுள்ளது. என கேஜ்ரிவால்  கூறி இருக்கிறார்...ஆனால் எனக்கு என்னவோ இவரின் கணக்கு தப்பு என தோன்றுகிறது...நிச்சயம் இதைவிட அதிகமாகத்தான் பதுக்கி இருப்பார்கள்......இது அனைத்தும் அரசுக்கு தெரியும்....
ஆனால் இதுவரை எந்த விவரங்களையும் அரசு வெளியிடாதது மட்டுமல்ல அதை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை ..ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்தானே...!

இந்த பட்டியலில் தொழிலதிபர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளனர்....நம்ம அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டால் இதெல்லாம் அதற்கு முன் தூசிதான்.....மொத்த  கருப்பு பணமான  சுமார் 25 லட்சம் கோடி மட்டும் இருந்தால் உலகின் வல்லரசே இந்தியாதான்....
எவன் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று!!

8 கருத்துகள்:

  1. இவர் ஏன் எந்த அரசியல்வாதியின் பெயரையும் வெளியிடவில்லை? சொல்லியிருக்கும் அமவுண்டு யானைக்கு சோளப்பொறி மாதிரி இருக்கு. பல லட்சம் கோடிகள் எங்கே? சில ஆயிரம் கோடிகள் தான் இவர் காட்டுகிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைதான் நானும் கேட்டு இருக்கிறேன் ....வெளியிடும் உண்மையிலும் ஏன் இந்த கஞ்சத்தனம்?!

      நீக்கு
  2. நல்ல பட்டியல்... இதை விட அதிகம் இருக்கும்... இது கொசுறு...

    நன்றி...
    tm5

    பதிலளிநீக்கு
  3. //எவன் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று?!//
    நீங்க தான்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எவன் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று?!//
      நாம் தான்.
      சேர்த்து சொல்லிவிட்டேன்

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....