21 நவம்பர் 2012

கசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்?!ஒருவழியாக பயங்கரவாதி  அஜ்மல் கசாப்  தூக்கில் போடப்பட்டுள்ளான் ......அதுவும் ரகசியமாக.....இது சரியா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது...இருங்கள் இருங்கள்..தீவிரவாதிக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று அடுத்த சர்ச்சைகள் எதுவும் கிளம்பி விட போகிறது....தெளிவாக சொல்லி விடுகிறேன்....

இதிலென்ன புடலங்காய் ரகசியம்....அவனுக்கு இதுவே லேட்...ஏன் என்றால் அவன் சாவை எதிர்பார்த்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவன்......கசாப் தாக்குதல் நடத்தியதும் தெளிவாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது..அவனுக்கு போயி 4 வருடங்கள் பாதுகாப்பு கொடுத்து,வழக்கு நடத்தி ,சாப்பாடு போட்டு எவ்வளவு வேலைகள் அரசாங்கத்திற்கு.!..நம் நாட்டில் வாழ  விரும்புவர்களுக்கு வழி  காட்டுகிறதோ இல்லையோ சாக வந்தவனுக்கும் வாழ்வு கொடுத்து இருக்கிறது நமது சட்டமும்,அரசாங்கமும் .....

 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த அவனை நடு ரோட்டில் வைத்து பகிரங்கமாக தூக்கில் போட்டு இருக்க வேண்டும்....அதுதான் சரி என சொல்ல வந்தேன்...அப்பத்தான் ஒரு பயம் இருக்கும்.....இப்ப மரண தண்டனை சரி என படுகிறதா?எனக்கு எப்பவுமே மரண தண்டனைதான் இதுபோன்றவர்களுக்கு சரி என படுகிறது ...

இப்ப கசாப்புக்கு கொடுத்த தண்டனை சரி என உங்களுக்கு பட்டால் மரண தண்டனை சரி என்பதை நீங்கள் ஒப்பு கொண்டீர்கள் என அர்த்தம்....கசாபுக்கு கொடுத்த தண்டனை தவறு என உங்களுக்கு பட்டால் நீங்கள் மரண தண்டனையை எதிர்க்குறீர்கள் என அர்த்தம்..இப்ப நீங்கள் எந்த பக்கம்?

அப்ப மரண தண்டனை விசயத்தில் இனி பாகுபாடு பார்க்க கூடாது....பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட எல்லாருக்கும்  இந்த நீதியே கிடைக்க வேண்டும்...அது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவனுக்கும்,அவனை அல்லது  அவர்களை தூண்டியவர்களுக்கும் சேர்த்தே!ஆனால் குஜராத்தில் படுகொலைகளை அரங்கேற்றி வேடிக்கை பார்த்த  மோடி போன்ற கொடுங்கோலன்  நாடாளும் அவலம்தான்  இங்கு நடந்து கொண்டு இருக்கிறது...!


  மரண  தண்டனையை எதிர்ப்பவர்கள் இந்த விசயத்தில் என்ன சொல்ல போகிறார்கள்?இப்பவும் மரண தண்டனை கூடாது  என்றா?கசாப்பை தூக்கில் போட்டு இருக்க கூடாது என்றா?இப்ப கூட இவனை தூக்கில் போட்டதை  மனித உரிமை ஆர்வலர்கள் ,மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் குறை சொல்வார்கள்..அப்ப அவனை என்னதான் செய்ய சொல்கிறார்கள்?சிறையிலே வைத்து மூன்று வேலையும் பாலூட்டி சீராட்டி வாழ  வைக்க சொல்கிறார்களா?

எந்த சம்பந்தமும்  இல்லாமல் அவன் நடத்திய தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு என்ன பதில் வைத்து இருக்கிறார்கள் மரண தண்டனையை குறை கூறுபவர்கள்...?

இந்த கசாப்பை போல  பயங்கர குற்றங்கள் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனைதான் நியாயமான தண்டனையாக இருக்க முடியும்....தண்டனைகள் கடுமையாக இருக்கும்பட்சதில்தான் குற்றங்கள் செய்ய சிறிதளவாவது  பயப்படுவார்கள்..

 தவறுகள் குறைய ,செய்த தவறுக்கு தண்டனையாக மரண தண்டனை வேண்டும் என என்னும் என்னைப்போல மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் வைத்து இருக்கும் காரணங்கள் என்ன?

எதற்காகவும்  ஒரு உயிரை கொல்ல  கூடாது,அதற்கு நமக்கு உரிமை  இல்லை என்பார்கள்...அப்ப இந்த கசாப் போன்ற குற்றவாளிகளுக்கு மட்டும் அந்த உரிமை இருக்கிறதாமா?!..........சொல்லுங்கள் !
26 கருத்துகள்:

 1. நல்ல அரசியல் நல்ல நீதி

  நவ 2008 மும்பையில் 166 பேர் கொல்லப்பட்டதுக்கு இன்று காலை அவசரமாக ரகசியமாக தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப் . எதிர்கட்சிகள்அந்நிய முதலீட்டுக்கு நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டுவருவதால் அதனை அமுக்க நாட்டுமக்களை திசை தி
  ருப்ப காங்கிரசின் அரசியல் இந்த அவசரம், ரகசியம்.

  2002 குஜராத்தில் 2000 மேற்பட்ட முஸ்லிம்கள் இனபடுகொலை செய்யப்பட்டார்கள் (கருவில் இருக்கும் குழந்தையை கூட வயற்றை கிழித்து நெருப்பிட்டு கொளுத்தினார்கள் ,முன்னாள் எம் பி ஈசான் ஜெப்ரி கூட இந்த கொடியவர்களிடம் இருந்து தப்ப முடிய வில்லை)இந்த பாதகத்தை செய்த மோடி தற்போது பிரதம வேட்பாளர். ம்ம் நல்ல அரசியல் நல்ல நீதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கசாப்பின் தண்டனை வரவேற்க்கதக்கதே....அதே வேளையில் மோடி போன்றவர்களுக்கு எப்போது தண்டனை?

   நீக்கு
  2. @Seenu said :

   ////கருவில் இருக்கும் குழந்தையை கூட வயற்றை கிழித்து நெருப்பிட்டு கொளுத்தினார்கள்//

   http://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad#Controversy_over_false_cases

   "The report which was brought to the notice of the bench consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the much publicised case of a pregnant Muslim woman Kausar Bano being gangraped by a mob and foetus being removed with sharp weapons, was also fabricated, and false.[18][20]"

   fabricated, and false - அர்த்தம் தெரியும்னு நெனக்கிறேன்...//

   நீக்கு
 2. பெயரில்லா10:41 AM, நவம்பர் 21, 2012

  இவன் சுடும்போது இந்துவா முஸ்லிமா என்று பார்த்து சுடவில்லை.இந்தியன் என்று தான் நினைத்து சுட்டு தள்ளினான்.. சரியான தீர்ப்பு...

  பதிலளிநீக்கு
 3. சகோதரர்களே !!! இங்கு ஒன்றை கவனித்தீரா.?? ஒரு தீவிரவாதி தானாக காலாவதி ஆனதற்கு கருத்து தெரிவித்த பெண்ணையும் அதற்க்கு லைக் என்ற ஒரு பட்டனை அழுத்திய பெண்ணையும் கைது செய்த காவல் துறை,இன்னொரு தீவிரவாதியை தூக்கில் போட்டதும் ஸ்வீட் எடு கொண்டாடு என்று நடுரோட்டில் கொண்டாடும் இந்துத்துவா வெறியர்களை வேடிக்கை பார்க்கிறது...

  நீங்கெல்லாம் நல்லா வருவீங்கடா..!!!

  நன்றி !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது....ஆனால் கசாப்புக்கு தூக்கு நியாயமானதே...நன்றி சகோ....

   நீக்கு
  2. //இவன் சுடும்போது இந்துவா முஸ்லிமா என்று பார்த்து சுடவில்லை.இந்தியன் என்று தான் நினைத்து சுட்டு தள்ளினான்.. சரியான தீர்ப்பு...//

   //தீவிரவாதியை தூக்கில் போட்டதும் ஸ்வீட் எடு கொண்டாடு என்று நடுரோட்டில் கொண்டாடும் இந்துத்துவா வெறியர்//

   //நீங்கெல்லாம் நல்லா வருவீங்க.!!!

   நன்றி !!!//

   நீக்கு
 4. நான் ஹசாப் தூக்கில் போட்டதை எதிர்க்கிறேன் . கசாப்பை சிறையிலேயே அடைத்து வைத்திருக்கலாம். (ஏன் சாதா உணவு கொடுத்தே வைத்திருக்கலாம். பிரியாணிதான் கொடுக்க வேண்டியதில்லை. உண்மையில் ஹசாப் ஒரு கருவி. அவரை எய்தவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறும் கருவிக்கு தண்டனை கொடுப்பதில் என்ன பலன்?

  காங்கிரசை பொறுத்தவரை இது அரசியல். அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரண தண்டனை கூடாது என்ற பார்வையில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்... அது உங்களின் எண்ணம்....ஆனால் மரண தண்டனை நிச்சயம் வேண்டும்...அந்த வகையில் கசாப்பின் தண்டனை சரியான ஒன்று..ஆனால் அதை நீங்கள் சொல்வதுபோல பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்ப காங்கிரஸ் இதை பயன் படுத்தி கொண்டது என்பதுதான் உண்மை...நன்றி

   நீக்கு
 5. //இந்த கசாப்பை போல பயங்கர குற்றங்கள் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனைதான் நியாயமான தண்டனையாக இருக்க முடியும்....தண்டனைகள் கடுமையாக இருக்கும்பட்சதில்தான் குற்றங்கள் செய்ய சிறிதளவாவது பயப்படுவார்கள்..//

  சர்ச்சை தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்தை சொல்லாமலே சாமர்த்தியமாக பின்னூட்டமிட்டுவிட்டீர்களே !நன்றி அய்யா

   நீக்கு
 6. தவறுகள் நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக தண்டனை அவசியம்தான். அது எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்குறீர்கள்....நன்றி...அதேதான்...

   நீக்கு
 7. சலாம் சகோ.ஹாஜா,
  கொலைக்குற்றவாளிக்கு மரணதண்டனை..! மகிழ்வுடன் நான் வரவேற்கிறேன்..!

  ஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை வெளியாகி வருஷக்கணக்காகியும்... நீதி மன்ற தண்டனை இல்லாமல் இயற்கையாக செத்துப்போன பால் தாக்கரே மேட்டரில் மனம் நொந்து போயி இருந்த எனக்கு....

  ....அப்பாடா... இபோதான் நிம்மதியா இருக்கு..!

  இனி, அத்வானி.... மோடி.... பத்தி எல்லாம் இதே போன்ற தண்டனைகளை மனசுக்குள் கற்பனை பண்ணி பார்த்து குதூகலித்து எதிர்பார்க்கவாவது ஒரு புது நம்பிக்கை நீதி மன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் இப்போ வந்து இருக்கு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #இதே போன்ற தண்டனைகளை மனசுக்குள் கற்பனை பண்ணி#

   வஸ்ஸலாம் சகோ...

   கற்பனையாகவே போய்விடும் நம் நாட்டில்..!

   நீக்கு
 8. //கருவில் இருக்கும் குழந்தையை கூட வயற்றை கிழித்து நெருப்பிட்டு கொளுத்தினார்கள்//

  http://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad#Controversy_over_false_cases

  "The report which was brought to the notice of the bench consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the much publicised case of a pregnant Muslim woman Kausar Bano being gangraped by a mob and foetus being removed with sharp weapons, was also fabricated, and false.[18][20]"

  fabricated, and false - அர்த்தம் தெரியும்னு நெனக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 9. சரியான தீர்ப்பு.


  2012 உலக அழிவிலிருந்து தப்பலாம்?
  http://kaliyukam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 10. கசாப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்களை வேரோடு அழிக்கும்வரை இது போன்ற தூக்கு தண்டனைகளில் பெரிதாக மாற்றம் வரப்போவதில்லை.. சொல்லப்போனால் கசாப் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்காக செயல்படும் பல இளைஞர்கள் அப்பாவிகளே.. காரணம்., பிஞ்சு வயதிலேயே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்த்துகொண்டு தாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனநிலையில் இருந்து வெளியேறவிடாமல் பல இயக்கங்கள் அவர்களுக்கு போதிக்கிறது. நல்லது கெட்டதை பிரித்தறியும் சூழ்நிலைக்கு போகவிடாமல் அவர்களை மூழ்கடிக்கிறது.

  கசாப் தூக்கிலிடப்பட்டதில் நாம் மகிழ்ந்தாலும் அதன் பின்விளைவுகளில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றும் கட்டாயத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது..!

  இப்போது அம்பைத்தான் அழித்துள்ளோம் எய்தவனை அல்ல..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி .......சரியாக சொல்லி உள்ளீர்கள்....இங்கே குஜராத் கலவரம் போன்ற குற்றங்கள் புரிந்தோருக்கும் இதே தண்டனையை எதிர்பார்க்கமுடியுமா?

   நீக்கு
  2. //கசாப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்களை வேரோடு அழிக்கும்வரை இது போன்ற தூக்கு தண்டனைகளில் பெரிதாக மாற்றம் வரப்போவதில்லை.. சொல்லப்போனால் கசாப் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்காக செயல்படும் பல இளைஞர்கள் அப்பாவிகளே.. காரணம்., பிஞ்சு வயதிலேயே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்த்துகொண்டு தாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனநிலையில் இருந்து வெளியேறவிடாமல் பல இயக்கங்கள் அவர்களுக்கு போதிக்கிறது.//


   தாங்கள் ஏன் இந்த ஒரு முதல் நிலை சோதனையுடன் நிறுத்திவிட்டீர்கள், அதற்க்கடுத்தடுத்த நிலை உண்மையறிதல் சோதனைகள், மூல காரணமறிதல் சோதனைகளை மேற்கொள்ளவில்லை? சற்று அதனையும் செய்து அதன் அறிபுகளை இங்கு தெரிவியுங்களேன்.

   //தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்க//

   இவர்களை - தீவிரவாத இயக்கங்க - தூண்டி விடுபவர்கள் யார்? என்ன உண்மையான காரணம்?

   நீக்கு
 11. இதே நாட்டின் இந்த அமைப்புகளே, தன்னுடைய அரசியல் வாழ்வின் உச்சத்திலிருந்த, பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி அவர்களை தகுதி/பதவி நீக்கம் செய்தது.

  இந்த ஒப்பீடு மூலம் தாங்கள் செய்யும் தவறு: சட்டத்தின் மேல் அல்லது நீதிமன்ற அமைப்பின் மேல் நம்பிக்கை இல்லை என்பதாகிறது. இந்த வகையில் யோசித்து பார்த்து பிறகு தங்களின் கருத்துகளை இட்டால் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 12. அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோஸ்
  நெத்தியடி சொன்னது முற்றிலும் சரியே ....
  சில கோடிகளை அவனுக்காக செலவழித்து 31/2 வருஷத்துக்கு பிறகு
  தூக்கிலிட்டது அநியாயம் , நேரம்,பணம் வேஸ்ட்
  கால தாமதம் செய்யாமல் முன்பே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ......
  அதுசரி மோடி,சாமியாரிணி பிரக்யா சிங் , அத்வானி turn எப்போ ???

  பதிலளிநீக்கு
 13. மனச்சாட்சியை (மன்னிப்பை) விட சிறந்த தண்டனை கிடையாது... ஆனால் மனச்சாட்சியே இல்லாதவனுக்கு....?
  tm12

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....