05 நவம்பர் 2012

பீட்சா ........பார்க்காதிங்க( .................!) பாஸ்!!

முதலில் இந்த படத்துக்கு  நல்ல விதமாக விமர்சனம் எழுதிய  பதிவர்களுக்கு  என்னுடைய சிறு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்....

நான் இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கும்போது  இதுதான் கதையாக இருக்கும் என இரண்டு விதமாக யோசித்தேன்...என்னைப்போலவே படம் பார்த்த அனைவரும் யோசித்து இருப்பார்கள்....


 ஆனால் இதுதான் கதையாக  இருக்குமோ என யோசித்த எல்லாருக்கும் இப்ப உள்ள மின்சார தட்டுபாடையும் பொருட்படுத்தாது  ஒரு பெரிய பல்ப்பை கொடுத்து அதை விட பெரிய  பொக்கையை பெற்றுள்ளார் இயக்குனர்...

எல்லா பதிவர்களை போலவே நானும் கதையை  சொல்ல மாட்டேன் என்று சொல்லாமல் கதை சொல்ல போகிறேன்...நான் சொல்லுவதை விட படத்தின் ட்ரைலர்களிலயே கதாநாயகி கதையை  சொல்லி விடுகிறார்...

அதாவது "எல்லாருக்கும் ஒரு மூமெண்ட்  வரும்..அவ நம்பிக்கையை  நம்பிக்கையாக  மாற்றுகிற மூமெண்ட் "என ரம்யா  நம்பீசன் சொல்லும் வசனம்தான் படத்தின் கதையே...

எல்லாரையும் கதையை  சொல்லவிடாமல் செய்து விட்டு படத்தின் இயக்குனரே எவ்வளவு தைரியமாக கதையை  பட விளம்பரங்களிலே சொல்லிவிட்டார்...!ஆனால் யாரும் கண்டுபிடிக்கத வண்ணம்...!


கிட்டத்தட்ட  படத்தின் நிறைகளை எல்லாரும் பிரித்து  மேய்ந்து விட்டார்கள்...

அதனால் நான் சிம்பிளாக சொல்லிகொள்கிறேன்....இந்த வருடத்தில் வந்த எல்லா பெரிய நடிகர்களின் படங்களை விட இது பெரிய படம்....நிச்சயம் 2 மணி நேரம்  தியேட்டரை விட்டு படம் பார்ப்பவர்களை  வெளியே யோசிக்க வைக்காத  படம்..அவ்வளவுதான்....

அப்புறம் முதலில் பதிவுலக நண்பர்களுக்கு  நான் சிறு கண்டனம் தெரிவித்தது "இந்த படத்தை திருட்டு VCD யிலோ DVD யிலோ பார்க்காதீர்கள் என நம் பதிவர்கள் சொல்லாத காரணத்திற்காக "ஹி ஹி.....(பெரும் தலைகள் எல்லாம் கோபப்பட வேண்டாம்..ஒரு வேலை இதை படித்தால்!)

அப்புறம் இந்த படத்தை பார்க்காதீர்கள் என தலைப்பு வைத்ததும்  சேம் ரீசன்தான் ....பீட்சா .....பார்க்காதிங்க (DVD ,VCD  களில் !)என்பதுதான் தலைப்பு.....!அதாவது எல்லாரும் இந்த படத்தை வீட்டில் திருட்டு VCD  யில் பார்க்காதீர்கள் தியேட்டரில் போய்  பாருங்கள் என சொல்லுவதற்காக ...(கண்டபடி திட்டாதிங்க பாஸ்)ஏனென்றால் நான் தியேட்டரில் பார்க்கவில்லை..மலேசியாவில் இது மாதிரி நல்ல படத்தை எல்லாம் ரிலீஸ் செய்ய மாட்டார்கள்...பீலா விட்ட  பில்லா மண்குதிரை  மாற்றான் போன்ற படங்களைத்தான் ரிலீஸ் செய்கிறார்கள்....நீங்களாச்சும் தியட்டரில் பாருங்கள்...!
14 கருத்துகள்:

 1. ஹாஹா...தலைப்பு சூப்பரு...படம் நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 2. படத்தின் முடிவை நானும் எதிர்பார்க்க வில்லை படம் வித்தியாசமாக இருந்தது...

  உண்மையில் எல்லா பேய் கதைகளும் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்படி அவிழ்த்துவிடப்பட்டவைகள் தான்....

  காட்சி அமைப்புகளும் நன்றாகவே இருந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசிவரை யூகிக்க முடியாமல் சென்றதே படத்தின் வெற்றி..மது,மது,சூது இவற்றோடு இன் இ மூட நம்பிக்கையும் மனிதனின் வீக்னசே என அடித்து சொல்கிற வகையில் இது நல்ல படம்....

   நீக்கு
 3. கனடாவில் நல்ல தமிழ் படங்கள் திரையரங்கில் ஓடுவதில்லை, ஆகையால் டிவிடியில் தான நான் பீட்சா பார்க்க போகின்றேன்.

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பதிவை படித்த பிறகு எனக்கும் சினிமா விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் தொற்ரிக் கொண்டு விட்டது நாளைக்கு பாருங்களேன்

  பதிலளிநீக்கு
 5. ஆஹ்ஹா... எப்படியெல்லாம் அசத்துறாங்கப்பா...!!!

  நன்றி...
  tm5

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....