16 நவம்பர் 2012

முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு ...பணிந்தார் விஜய்....வெற்றி நமதே!அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பதைப்போல முஸ்லிம்களின் தொடர் போராட்டங்களால் துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தவறாக காட்டி உள்ளதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு உள்ளனர் விஜய்யும் இயக்குனர் முருகதாசும்....

மேலும் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகளை படத்திலிருந்து நீக்குவதாகவும் கூறி இருக்கின்றார்கள்....இது சம்பந்தமாக முருகதாஸ்,விஜய்யின் அப்பா, தாணு ஆகியோர் கூறியதாவது "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிகளை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம்.
முஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்," என்றனர்."

  இது நமக்கு கிடைத்த வெற்றி..!முஸ்லிம்களை தவறாக காட்டிய படம் இனி இதுவே கடைசி  படமாக இருக்கட்டும்...குட்ட குட்ட குனியாமல் திருப்பி குட்டினால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்....!

இனி முஸ்லிம்களை எந்த படத்திலாவது கிள்ளுகீரையாக பயன்படுத்தினால் இதுதான் முடிவு...முஸ்லிம்களை மட்டுமல்ல ஏனைய அனைத்து  மதத்தினரையும் சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று அவமதிக்கும் வகையில் இருக்க கூடாது என்பதற்கு இது ஒரு அழகான ஆழமான முற்றுபுள்ளி........

சினிமாகாரர்களே உங்கள் தொழில் சினிமா எடுப்பது மட்டுமே....அதை மட்டும் இனி பாருங்கள்..எந்த மதத்தையும் புண்படுத்தி இது போல வாங்கி கட்டி கொள்ளாதீர்கள்...

இதுவே தொடக்கம்...இனி எந்த படத்திலும் முஸ்லிம்களை  தவறாக காட்டினால் இது போன்று போராட்டம் நடத்தி அவர்களுக்கு சவுக்கால் அடிகொடுக்க வேண்டும்.....

இந்த விசயத்தில் ஒற்றுமையாக செயல்பட்ட அனைத்து  முஸ்லிம் அமைப்புகளுக்கும் நன்றி .......

மேலும் இது பற்றிய எனது முந்தய பதிவுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து  பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி....

34 கருத்துகள்:

 1. 'துப்பாக்கி தவறுக்கு பிராயச் சித்தம்...

  ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் விஜய்' - எஸ்ஏசி அறிவிப்பு!!


  Published: Friday, November 16, 2012, 9:22 [IST]
  Posted by: Shankar

  Vijay Will Appear As Muslim Next Movie
  Amala paul to act with Vijay


  துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று அறிவித்துள்ளார் அவர் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

  துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி அவமானப்படுத்திவிட்டதாக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.

  நபிகள் நாயகத்தை அவமதித்த ஹாலிவுட் பட விவகாரத்தில் இந்த அமைப்புகள் சில தினங்களுக்கு முன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

  இதே நிலை துப்பாக்கி படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ விஜய் ஆகியோர், அதிரடியாக சரண்டர் படலத்தை அரங்கேற்றிவிட்டனர்.

  அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களையும் நேற்று சென்னையில் சந்தித்த இயக்குநர் முருகதாஸ், தாணு, எஸ் ஏ சந்திரசேகரன், அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர். காட்சிகளை நீக்கவும் ஒப்புக் கொண்டனர்.

  அடுத்து எஸ்ஏ சந்திரசேகரன் அறிவித்ததுதான் இந்த சரண்டர் படலத்தின் உச்சகட்டம்.

  அதை அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், "என் மகன் விஜய் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. சாதி, மத வேறுபாடுகளே அவனுக்கு இல்லை.

  இந்தப் படத்தில் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக தெரியாமல் இடம்பெற்ற சில காட்சிகளுக்காக வருந்துகிறோம்.

  இதற்கு பிராயச்சித்தமாக என் மகன் ஒரு படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடிப்பார்," என்றார்.

  SOURCE: http://tamil.oneindia.in/movies/news/2012/11/ar-murugadass-thaanu-sac-apologise-164732.html.

  =======================


  விஸ்வரூபம் திரைப்படம்:

  முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை


  Thursday, 08 November 2012 18:03

  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:

  பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார்.

  அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

  கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள்.

  ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை.

  இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை.

  எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.


  கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.

  இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம்.

  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான ஊடக திரிபுகளை அனுமதிக்க முடியாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்

  (ஜே.எஸ். ரிபாயி)

  source:http://www.tmmk.info/index.php?option=com_content&view=article&id=2810:2012-11-08-12-35-14&catid=42:press-reless&Itemid=160

  பதிலளிநீக்கு
 2. இது மாதிரி இந்து மததத்தைபற்றி முஸ்லிம்கள் தரக்குறைவாக எழுதுவதையும் மேடைபோட்டு பேசுவதையும் நிறுத்திகொண்டால் இன்னும் இரு மதத்திநறும் ஒற்றுமையாக வாழ வழிசமைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார் ..எதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் தெரியுது ..எந்த கிரகம்னு தெரிஞ்சிக்கலாமா ???

   நீக்கு


  2. மதன்ஜி எந்த முஸ்லிம் மேடைபோட்டு போட்டு மாற்று மத சகோதரர்களை தாக்கி பேசியிருக்கிறான்,பேசுனா மேடையிலிருந்து இறங்குமுன்பே அவன் மேலே 100 கேசு போட்டு உள்ளே தள்ளிடுவிங்க, அதே முஸ்லிமை தாக்கி பேசினால் 300 போலிஸ் பாதுகாப்பு கொடுத்து அவனை பாலுட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்குவிங்க, இதுதானே காலம் காலமாக நடக்குது.

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. உங்களை விட மதவெறி உணர்வு குறைஞ்சவந்தான் மற்றும் நீங்கள் பிறந்து வாழும் அதே கிரமாம்தன் சார் நானும் .

   நீக்கு
 3. Poi pulla kuttingala padikka vaingayya. Kappi thanama pesikittu.........

  பதிலளிநீக்கு

 4. "இது மாதிரி இந்து மததத்தைபற்றி முஸ்லிம்கள் தரக்குறைவாக எழுதுவதையும் மேடைபோட்டு பேசுவதையும் நிறுத்திகொண்டால் இன்னும் இரு மதத்திநறும் ஒற்றுமையாக வாழ வழிசமைக்கும்."


  எந்த முஸ்லிம் மேடைபோட்டு போட்டு மாற்று மத சகோதரர்களை தாக்கி பேசியிருக்கிறான்,பேசுனா மேடையிலிருந்து இறங்குமுன்பே அவன் மேலே 100 கேசு போட்டு உள்ளே தள்ளிடுவிங்க, அதே முஸ்லிமை தாக்கி பேசினால் 300 போலிஸ் பாதுகாப்பு கொடுத்து அவனை பாலுட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்குவிங்க, இதுதானே காலம் காலமாக நடக்குது.

  பதிலளிநீக்கு
 5. இனி மற்றவர்கள் மனது புண்படாதவாறு கதைகளை உறுவாக்கினால் நல்லது...

  பதிலளிநீக்கு
 6. தவறு என்று தெரிந்ததும் அதற்க்காக மனிப்புகேட்டும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்குவதட்க்கும் முடிவெடுத்த நிலையுலும் விஜயை உருமாற்றி கேவலமாக சித்திகரித்து எங்களுக்கு அவர் அடிபணித்து விட்டார் என்று கோழைத்தனமாக கொக்கரித்து பதிவெழுதும் முஸ்லிம் உறவுகளைப்பார்த்தால் மிகவும் மனவேதனையாவுள்ளது நீங்கள் இஸ்லாத்தை தவறாக வெறியோடு பார்கின்றீர்கள் இதுதான் உண்மை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மானஸ்தன்(செந்தில்)தங்கச்சி அழகுமணியை கவுண்டமணிக்கு கல்யாணம் செய்து வைத்த பின்பு நடக்கும் கலாட்டாவில் ஒருவர் கவுண்டமணியை பார்த்து சொல்லுவார் பாருங்கள்..!!!

   " அதெல்லாம் அன்னைக்கு பாயாசம் வாங்கி குடிச்சில்ல !அப்பவே யோசிச்சிருக்கணும் "

   நன்றி !!!

   நீக்கு
  2. ஹா ஹா....எப்படி சகோ இதெல்லாம்!...சரியான பதில்....நன்றி

   நீக்கு
  3. குட்டி காட்டும் வரை இவர்களுக்கு செய்தது தவறு என உறைக்கவில்லை தானே!இது அவர் படத்தில் அவரே நடித்த ஒரு காட்சிதான்...இதை கேவலம் என்று நீங்களே கூறி கொண்டால் நான் என்ன செய்வது?தவறு செய்தது அவர்கள்..திருத்தியது முஸ்லிம் சகோதரர்கள் ...அதை கோழைத்தனம் என்பது இவர்களிடம் விஜய் மன்னிப்பு கேட்டு விட்டாரே என்ற உங்களின் குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுகிறது!

   நீக்கு
  4. கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளுங்கள் மைதின் விஜய் மனிப்பு கேட்டதையிட்டு பெருமயோடுதான் எழுதயுள்ளேன் உங்களது இந்த ஆக்கத்துக்கு அவரது சாதாரண முகபாவனை போட்டோவை இடலாமல்லவா ?

   உங்களது நிறையப்பதிவுகள் அடுத்த மத்தது காரர்களைப்பற்றித்தான் எழுதியுள்ளீர்கள் நீங்கள் ஒரு மதவாதி என்பது நல்லாத் தெரிகிறது .

   நீக்கு
  5. என்னை மதவாதி என்று குறிப்பிடும் நீங்கள்தான் மதவாதியாக இருக்க கூடும்...நான் புரிந்துதான் எழுதுகிறேன்.....இதே பதிவிலே நான் எல்லா மதத்தினரையும் புண்படுத்தாமல் படம் எடுங்கள் என்றுதான் எழுதி இருக்கிறேன்..அதற்கு பெயர் உங்கள் பார்வையில் மதவாதியா?என்னுடைய 300 பதிவுகளில் இஸ்லாம் பற்றி ஒரு பத்து பதிவுகூட எழுதி இருக்க மாட்டின்...பெரும்பாலும் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பதிவுகளைத்தான் நான் அதிகம் எழுதி வருகிறேன் என்பது என் பதிவை படிக்கும் நண்பர்களுக்கு தெரியும்..பிற மதத்தினரை மனம் புண்படும்படி நான் எந்த பதிவும் எழுதியதில்லை..சும்மா குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கம்தான் உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது....

   நீக்கு
 7. பெயரில்லா1:25 PM, நவம்பர் 16, 2012

  Appadi entral neenkal Israel Modi patryo Padam edunka sir... Nadakka tha onnum padathula kamikkala... In the same film last scene shown as most of Muslim officers also there in Military force who is going to save Mother Land.. Naattula rendu vithamana aatkalum irukkanka.. So see it as film and if u r not willing to see don't go..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைதான் நானும் கேட்கிறேன்..நடக்காததை படத்தில் எடுக்கவில்லை என்றால் இதே இந்தியாவில் ஈவு இரக்கம் இல்லாமல் மக்களை கொன்று குவித்தாரே மோடி அவரைப் பற்றி ஏன் எவனும் இன்னும் படமாக எடுக்கவில்லை..?

   நீக்கு
  2. பெயரில்லா2:49 PM, நவம்பர் 16, 2012

   Athan yarume edukkala illa... Neenka poi edunka sir.. Appadiyavathu Modi ragasiyankal veliya varattum.. Unkalukku Antha Urumai illaye..?!

   நீக்கு
 8. மிகவும் மகிழ்ச்சியான செய்தி...

  இனிமேல் இது போல் நடக்காமல் இருந்தால் சரி...
  tm6

  பதிலளிநீக்கு
 9. அஸ்ஸலாமு அலைக்கும்,

  இந்த விவகாரத்திற்காக குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி. பிரச்சனையை உணர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு ஒப்புக்கொண்ட படக்குழுவினர் போற்றத்தக்கவர்கள். அவர்களுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்வோம். இப்படியான இனி நடக்காமல் இருக்க இது ஒரு பாடமாக அமையட்டும்...

  @ ஹாஜா மைதீன்,

  பதிவில் உள்ள படம் அவசியமற்றது. தாங்கள் தயவுக்கூர்ந்து அதனை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....
   இந்த படம் ஒன்றும் போட்டோசாப்பில் உருவாக்கப்பட்டது அல்ல சகோ...இது அவரே நடித்த காட்சிதான்....இது தவறாகவா படுகிறது?!

   நீக்கு
  2. சலாம் சகோ.ஆசிக்

   காயத்தின் வடுக்கள் இருப்பது இயல்பு தானே..! என்ன ஒன்னு அவர்கள் ஏற்படுத்திய காயத்தின் வடுக்களை அவர்களுக்கே திருப்பி விட்டோம்...இந்த கண்ணோட்டத்தில் பார்க்கலாமே சகோ..!!

   வஸ்ஸலாம் ....

   நீக்கு
 10. //எந்த முஸ்லிம் மேடைபோட்டு போட்டு மாற்று மத சகோதரர்களை தாக்கி பேசியிருக்கிறான்,பேசுனா மேடையிலிருந்து இறங்குமுன்பே அவன் மேலே 100 கேசு போட்டு உள்ளே தள்ளிடுவிங்க, அதே முஸ்லிமை தாக்கி பேசினால் 300 போலிஸ் பாதுகாப்பு கொடுத்து அவனை பாலுட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்குவிங்க, இதுதானே காலம் காலமாக நடக்குது.//

  தமுமுக மேடைகளில் கேட்டுப்பாருங்கள். அப்புறம் உங்க டோலர் திருமா நிறைய சொல்வார்...

  பதிலளிநீக்கு
 11. இனிமேலாவது எந்த மதத்தினர்களையும் மனதை பாதிக்காத அளவுக்கு தமிழ் சினிமா வரட்டும்.

  பதிலளிநீக்கு
 12. இனிமேலாவது எந்த மதத்தினர்களையும் மனதை பாதிக்காத அளவுக்கு தமிழ் சினிமா வரட்டும்.

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. விஜய் தரப்பு மன்ணிப்பு கேட்டதை கொண்டாடும் அளவுக்கு ஒன்னும் பெரிய விஷயமில்லை. அவங்களோட மன்ணீப்பிற்கு அந்த அளவுக்கு மகுடம் கொடுக்க வேண்டிய தகுதி என்ன இருக்கு. பணத்துக்காக எதையும் தின்னு எப்படியும் வாழுற ஓநாய் கூட்டம் அது. அது மண்ணிப்பு கேட்டதை போய் ஒரு தனிப்பதிவா போடுற அளவுக்கு என்ன இருக்குனுதான் புரியல.

  ஒரு பக்கம் ஒரு சாரார் ஹிந்து முஸ்லீம் எப்படியாவது ஒற்றுமையுடன் வாழவைத்து விட வேண்டுமென தீவிர முயற்சியில் உழைத்துகொண்டு இருக்கும்போது இந்தமாதிரி ஈன பிறவிகள் இடையிடையே எதையாவது படம் எடுத்து சமூக ஒற்றுமையை சீர் குலைத்து கொண்டு இருக்கிறது

  நடுநிலை பார்வையோடு பார்க்கும் நேர்மையும் திறமையும் யாருக்கு இருக்கிறது இங்கே???

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....