காஷ்மீரில் நடக்கும் பிரச்சினைகளை வெறும் பார்வையாளனாக கடந்து செல்வோர்தான் நம்மில் பெரும்பாலோர்.....
காஷ்மீர் பிரச்சினை எப்போதும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையாக மட்டுமே ஊடகங்களால் எழுதப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது....அங்கு மக்கள் படும் துன்பங்களை யாரும் கண்டு கொள்வதில்லை....
பொதுமக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போலீஸ் அவர்களை தீவிரவாதிகளாக உருவாக்கியே தீர்வதில் முழு மனதுடன் செயல்பட்டு வருகிறது ....
காஸ்மீர் மக்கள் ஒரு பக்கம் தீவிரவாதிகளாலும் ஒரு பக்கம் இந்திய ராணுவம் மற்றும் போலிசாலும் பெரும் துயரத்துக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்....
அங்கு பெண்களக்கு பாதுகாப்பு இல்லை....சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை....
இந்த சிறுவனை பாருங்கள்....பைசான் பசிர் சோபி என்ற இந்த 12 வயது சிறுவனை கைது செய்துள்ளது போலீஸ்....
இவன் மீது தீ வைப்பு, கொலை முயற்சி,மற்றும் நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....
இவனுடன் மேலும் நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே விடப்பட்டுள்ளனர்....
கொஞ்சம்கூட மனசாட்சி இல்லையா இவர்களுக்கு ?
இந்த சிறுவனா நாட்டிற்கு எதிராக போர் தொடுக்க போகிறான்?
விளையாட்டு துப்பாக்கி வைத்து விளையாடும் வயதுள்ள இவனா துப்பாக்கி தூக்கி கொலை செய்ய போகிறான்...?
நெருப்பை கண்டு பயப்படும் வயதுள்ள இவனா தீவைத்து கொளுத்த போகிறான்?
ஜெயிலுக்கு சென்று வந்த அவனின் மனநிலை எப்படி இருக்கும்? செய்யாத தவறுக்கு கைது செய்யப்பட்டுள்ள அவனுக்கு நாளடைவில் இதை செய்தால் என்ன என்ற மனநிலை உருவாவதற்கு யார் காரணம்?
அப்பாவி மக்களை மூளை சலவை செய்ய வலைவீசி காத்திருக்கும் தீவிரவாதிகளின் கண்களில் இந்த சிறுவர்கள் சிக்குவதற்கு யார் காரணம்?
போலீசா?ராணுவமா?அரசாங்கமா?இல்லை ஏதுமறியாத இந்த சிறுவர்களா?
Tweet |