
தமிழக மக்களுக்கு அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பதில் ராமதாசின் பங்கு அளவிட முடியாதது....அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:
வன்னியர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., பின்னால் இருக்க கூடாது
.(அப்ப சைடுல இருக்கலாமோ )இந்த கட்சிகளை வேர் அறுக்க வேண்டும்
(நீங்கதான் மரங்களையே வெட்டுவிங்களே.)2016ல், வன்னியர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்(. ஓட்டுப் போடும் ஜென்மங்களாக நம்மை வைத்திருந்தது போதும்
(அப்ப இனிமே ஒட்டு போடாம இருக்கபோறிங்களா ?). நாம் வாழ குலக்கொடியை உயர்த்தி பிடிப்போம்
.(முதல்ல உங்க கட்சி கொடியை தேடிபிடிங்க )அதுவரை உறக்கம் இல்லை; ஓய்வு இல்லை
.(ஓஹோ ..நீங்கல்லாம் இப்ப ஓய்வில்லாமல் இருக்கிறதா நெனச்சுக்கிட்டு இருக்குறீர்களோ )15, 18 வயதுடைய எல்லோரும் மாமல்லபுரம் வர வேண்டும்
(15 வயசுக்கெல்லாம் ஓட்டுரிமை இல்லைன்னு யாராவது அவர்ட்ட சொல்லுங்கப்பா ). பா.ம.க.,வில் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்
(மொதல்ல கட்சியில உள்ளவங்கள உங்க சின்னத்திற்கு ஒட்டு போட சொல்லுங்க...).எங்களுக்கு வேறு யாரும் தலைவர்கள் கிடையாது
(உங்களையும் சேர்த்துதானே ). எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும். திராவிட கட்சிகள் இலவசத்தையும், சினிமாவையும், சாராயக் கடையையும் தான் தந்தனர். கழகங்களின் மாய்மாலம் இனி மேலும் செல்லாது.
நான்கு ஆட்டு குட்டியை கொடுத்து வளர்த்து கொள்ள சொன்னால், அது வளர்ந்து உடனே நகைக் கடையும், துணிக் கடையும், ஓட்டலும் நடத்தும் அளவிற்கு உயர்ந்து விடுவர் என ஏமாற்றுகின்றனர்
(அபார கற்பனை சக்தி சார் உங்களுக்கு ).1980களில் வன்னியர்கள் கண்ணை மூடிக்கொண்டு வந்ததை போல்
(நீங்களே ஒத்துகிறிங்க,அவங்க எல்லாம் தெரியாம வந்துட்டாங்க என்று )இப்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட்டு, என் பின்னால் வர வேண்டிய நேரம் வந்து விட்டது
(ஏற்கனவே உங்க பின்னாடி இருந்தவங்க எல்லாம் ஓடிகிட்டு இருக்காங்க ..முதல்ல அவங்கள பிடிங்க சார் ).எல்லோரும் ஓடி வாருங்கள்;
(ஏன் உங்க தோட்டத்தில ஓட்டபந்தயம் நடத்த போறிங்களா?)2016ல் கழகங்களை மூட்டை கட்டி போடப் போகிறோம்.அவர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறோம்
(எல்லாரும் ஜோரா ஒருதடவ கைதட்டுங்க...அட என்ன சார் உங்க பேச்சுக்கு கை தட்ட கூட ஆள காணோம்....நீங்க என்னடான்னா சந்தானத்துக்கு போட்டியா காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிங்க....) புதிய அத்தியாயம், புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழக மக்களுக்கும் சொல்கிறோம்.
(புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு இலவச விளம்பரம் செய்றாரு...
வேற ஒன்னும் இல்ல)மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகம் உள்ளவர்கள் யார்?நீங்களே பதில் சொல்லுங்கள்.
(உங்க மேல உங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டதா ?) இவர்கள் எல்லாம் மற்ற கட்சியிலா இருக்க வேண்டும்.
இப்போது நம்மை வெளிக்காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுவரை தமிழகத்தில் 30 முதல்வர்கள் இருந்தனர். 10 நாள் கூட ஒரு வன்னியர் முதல்வராக இருந்ததில்லை (
பத்து நாளுக்கெல்லாம் முதல்வர் பதவி கிடைக்காதுங்க...இது என்ன முதல்வன் படத்துல வர முதலமைச்சர் வேடமா?)இதுவரை வன்னியர்களுக்கு கழகங்களில் என்ன பதவியை கொடுத்தனர்; ஒன்றிய செயலர், சேர்மன், கவுன்சிலர், கிளை செயலர் பதவியைத் தவிர எதையும் கொடுக்கவில்லை
(அப்ப இது எல்லாம் பதவிகளே இல்லையா?). இதையெல்லாம் நான் வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை.
(சும்மா ஜோக்குக்கு தான் சொல்றேன்னு அவரே சொல்ல வராரு ) 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
(ஒட்டு போடுற எந்த மனிதனுக்கும் கொம்பு இல்லைங்கோ....!) இதை நோக்கி நம் பயணம் தொடரட்டும்.
( ஓகே படம் பார்த்தாச்சா கிளம்புங்க....)....என தனது நீண்ட பேச்சை நிறைவு செய்து மக்களின் சிரிப்புகளுக்கு ஒரு இடைகால முற்றுபுள்ளி வைத்தார் ராமதாஸ் ...