10 ஜூன் 2011

பதிவர்களை வம்புக்கு இழுத்த சுஹாசினி....




இணையதள எழுத்தாளர்களை கேட்பாரில்லை ,சொல்வாரில்லை, கட்டுப்பாடு இல்லை, ஒரு கணினி கிடைத்து விட்டால் தங்களை மேதாவிகளாக ,விமர்சகர்களாக நினைத்துகொண்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கின்றனர்...மொத்தத்தில் இணையத்தளம் வக்கிரத்தின் வடிகாலாக மாறிவிட்டது....

என்னைய திட்டாதிங்க நண்பர்களே....இது நான் எழுதியது அல்ல....

திரை உலக மகா அறிவாளியும், தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகையாக தன்னை நினைத்து கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டும் சுகாசினிதான் இவ்வாறு நம்மீது ( ஹி ஹி ..நானும் எழுத்தாளர்னு சொல்லிகிட்டாச்சு....) பாய்ந்து இருக்கிறார்....அவருக்கு முதலில் எனது கடும் கண்டனங்கள்.....

இவருக்கும் பதிவர்களுக்கும் என்ன பகை?ஆயிரகணக்கான பதிவுகள் குவியும் இடத்தில் சில பதிவுகள் ஆபாச பதிவுகளாக ,அருவெறுப்பு கலந்த எழுத்துக்களாக இருக்கலாம்...அதற்காக பதிவிடும் எல்லா எழுத்தாளர்களையும் குறை சொல்வதா?

பதிவுலகில் இல்லாத விசயங்களே இல்லை...அறிவியலிலிருந்து ஆன்மிகம் வரை, கதைகளிலிருந்து கவிதைகள் வரை, பொழுது போக்கிலிருந்து புது கண்டுபிடிப்புகள் வரை எழுத்துக்களாக மலை போல குவிந்து இருக்கும் இடத்தில் நீங்கள் குப்பையை தேடினால் அது உங்கள் தவறே....

கணினியில் எழுதினால் அவர்கள் மேதாவிகள் ...எழுதாத நீங்கள் எல்லாம் முட்டாள்கள் என்று எண்ணுவது உங்களின் தவறுதானே தவிர எங்களின் தவறு அல்ல..


நீங்கள் மட்டும் ஒரு டிவி சேனல் கிடைத்துவிட்டால் எல்லா படங்களையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கலாமா?உங்களின் விமர்சனங்களை விட எங்கள் பதிவுலகின் விமர்சகர்கள் நூறு படி மேலேதான்.....அண்ணன் சி பி செந்தில்குமாரின் விமர்சனம் ஒரு உதாரணம்..

இன்றைய சினிமாவில் தொடையும்,தொப்புளையும் காட்டாத சினிமா ஏதாவது உண்டா?அப்ப எல்லா சினிமாவையும் தடை செய்யலாமே?

நீங்கள் கூட லோ ஹிப் சேலையில் தானே வலம் வருகுறீர்கள்? உங்கள் பார்வையில் அது தப்பில்லை...அதுபோல எல்லாவற்றையும் சரியாக பாருங்கள்...பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்ததுதான் சரியும் தவறும்....

இங்கு மாங்கு மாங்குன்னு நாங்க எழுதுறது உங்களை திருப்திபடுத்த அல்ல...எங்களின் திருப்திக்காக ....

உங்கள் கூற்றுப்படி நாங்கள் மேதாவிகளாகவே இருந்துவிட்டு போகிறோம்....மேதாவிகளை கண்டால்தான் அறிவீனர்களுக்கு ஆகாதே....

09 ஜூன் 2011

சபாஸ் ஜெ...தமிழ் சினிமாவில் சுஸ்மா சுவராஜ்...(கதம்பம்)



ராஜபக்சேவை போர்குற்றவாளி என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெ க்கு பாராட்டுக்கள்....

இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லைதான்...ஆனால் இந்த ஒரு தீர்மானத்தை கூட தமிழர்களுக்காக கருணாநிதி சட்டசபையில் நிறைவேற்றவில்லை....
அந்த வகையில் ஜெ செய்தது பாராட்டத்தக்கதே....

கனிமொழிக்கு நேற்று ஜாமீன் கிடைக்கததால் திமுக உயர்நிலை குழு கூட்டத்தை அவசரமாக கூட இருக்கிறது.....கனிமொழிக்காக இக்குழு கூடுவது இது இரண்டாவது முறை....அண்ணா ஆரம்பித்த கட்சி ....ஹ்ம்ம்....என்ன பண்ணுவது...இப்போது அண்ணா உயிர் பெற்று வந்தால் முதல் வேலையாக திமுகவை கலைத்து விட்டுதான் மறு வேலை பார்ப்பார்....

உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ராம்தேவ் அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டி கொண்டு இருக்கிறார்....போலிசிடமிருந்து தப்பிபதற்காக சல்வார் கமீஸில் ஒளிந்த அவர் அதே வேடத்தில் பேட்டி கொடுத்தது பம்பர் காமெடி.....ராம்தேவ் பல்லாயிரம் கோடிகளை குவித்து இருக்கிறார் என இவர் மீது குற்றம் சொல்லும் மத்திய அரசு ஆரம்பத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?
அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது ஏன்?

இப்போது என்னடான்னா ராம்தேவ் புரட்சி படையை உருவாக்க போகிறேன் என்று தெலுங்கு பட வசனங்களை பேசி மத்திய அரசுக்கு வெறியூட்டி வருகிறார்....இதுதான் கிறுக்கு பய ஊரில் கேனப்பய நாட்டாமை பண்ணுவது என்ற பழமொழிக்கு அர்த்தமோ?

தேச பக்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சுஸ்மா சுவராஜ் பட்டையை கிளப்பி உள்ளார்..தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் தவறு இல்லையாம்....கொஞ்சம் உசாரா இருங்க மேடம்...இல்லாவிடில் தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடுவதற்கு தூக்கி கொண்டு வந்துவிடுவார்கள்.....ஏன்னா இப்ப இங்கே ஆன்ட்டிகளின் நடனம்தானே லேட்டஸ்ட் டிரன்ட் ....

சிபிஐ விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் சிக்கியுள்ள செய்திகள் வெளிவரத் துவங்கியதிலிருந்து சன் டிவியின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிய ஆரம்பித்துள்ளதாம்...
ஆனால் தயாநிதி மாறன் விவகாரத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என சன் டிவி அறிவித்துள்ளது.....அப்பறம் என்ன எழவுக்கு பங்குகள் சரிந்தது என கே டி பிரதர்களுக்கே வெளிச்சம்...

07 ஜூன் 2011

கே டி பிரதர்ஸின் மோடி வித்தைகள்....


கருணாநிதி குடும்பத்தில் அடுத்ததாக திஹார் சிறைக்கு சுற்றுலா செல்ல கே டி பிரதர்ஸின் சார்பாக தயாநிதிமாறன் போவதற்கு வாய்ப்பு அதிகரித்து உள்ளது...

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்குமாறு அதன் உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டினார் என்பதுதான் தயாநிதிமாறன் மீதான குற்றசாட்டு..

சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம்.

இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று சிபிஐ நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்தார் சிவசங்கரன்.

சிவசங்கரன் கூறுகையில், தயாநிதி மாறன் எனக்குக் கொடுத்த நெருக்கடியால், என்னை கழுத்தை நெரிப்பது போல உணர்ந்தேன். தயாநிதி மாறனின் செல்வாக்கு காரணமாக எனது விண்ணப்பங்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் நான் ஆனந்தகிருஷ்ணனிடம் ஏர்செல்லை விற்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

சிவசங்கரனின் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியமாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது சிபிஐ. பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது சினிமாவில் வில்லன்கள் செய்வதுபோல இருக்கிறதுதானே?....என்ன ஒரு ஜெகஜ்ஜாலத்தனம்...?இதுமட்டுமல்லாமல் தனது வீட்டில் உள்ள (சென்னையில்) பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பை சன் டிவி க்கு திருட்டுத்தனமாக பயன்படுத்தினார் என்றும் ஒரு பூதம் கிளம்பி உள்ளது...

பதவியும்,பணமும் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இப்போது திஹார்தான் வாடகை இல்லாத இருப்பிடம் என்பதை நீதித்துறை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க வேண்டும்...

06 ஜூன் 2011

மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...


திமுகவின் தோல்விக்கு பிறகு திருவாரூரில் மீண்டும் வழக்கம்போல ஒரு பிரமாண்ட ! பொதுக்கூட்டத்தை நடத்தினார் கருணாநிதி....

தனது வெற்றிக்காக நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் மகள் கனிமொழிக்காக கூப்பாடு போட்டுள்ளார்....

ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். (நம்ம தமிழ்நாட்டிலும் அப்படிதானே இருக்கு)அப்படிப்பட்ட இடத்தில், அந்த திஹார் சிறையில் இருக்கிறார் என் மகள் கனிமொழி. ( உங்க மகளுக்காக சிறையை பூங்காவனமாக மாற்றவா முடியும் ?) இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார்....( நேரடியாக மத்திய அரசை இப்போதுதான் குற்றம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்)

என்னைப்பற்றி, எனது மகன்களை, மகள்களை பற்றி, பேரன்களை பற்றி பல்வேறு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. ( எல்லா அயோக்கியத்தனத்தையும் பண்ணினா அப்படித்தான்) இதனால் மக்களின் கருத்து விஷமாகி திராவிட இயக்கம் என்ற அந்த சொல்லையே வீழ்த்தி விடலாம் என்று. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்து விட, வீழ்த்தி விட எந்த கொம்பனும் பிறக்கவில்லை.( ஹி...ஹி ...சும்மா காமெடி பண்ணாதிங்க..உங்க குடும்பமே போதுமே...)

எனது மகள் கனிமொழி டெல்லி திகார் சிறையில் உள்ளார். எனது மூத்த மகள் செல்வி இங்கு வந்துள்ளார். அவர் திருவாரூர் தொகுதியில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். ( ஆஹா அடுத்த வாரிசா?)அவரின் உழைப்பை யாரும் மறக்க முடியாது. (அப்ப உறுதியா அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொல்லுங்கள் )செல்வியோடு, கனிமொழியும் ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார். (அதனால்தான் திமுக தோற்றது என இவருக்கு யார் புரியவைப்பது?)


கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். (அப்ப நீங்களும் சிறை செல்ல தயாரா?) கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.(உங்கள் மகள் என்பதே ஒரு ஆதாரம்தானே !என்ன கொடுமை சார்...)

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.( யார் தவிர்ப்பார்? ஒரே குழப்பமா இருக்கே )

இறுதியில் ஜெயலலிதா சந்தோசப்படும் விசயமும் நடந்தது....கனிமொழியை பற்றி பேசும்போது அழுதுவிட்டாராம் கருணாநிதி....இப்ப அழுது என்ன புண்ணியம்?

05 ஜூன் 2011

உலகை வியக்க வைத்த விஜயகாந்த்...


வாரம் ஒரு தடவை நம்ம கேப்டனை பற்றி பதிவிடாமல் விட்டால் அது எதிர்க்கட்சிதலைவருக்கு நாம் செய்யும் துரோகமல்லவா?

பொதுவாக நம்ம கேப்டன் சண்டை போடுவதில் கில்லாடி....இரண்டு கால்களால் அவர் இறநூறு பேரை அடிக்காவிட்டால்தான் அது ஆச்சர்யம்.....

ஹாலிவுட்டில்கூட இல்லாத ஸ்டைலில் சண்டை போடுவதுதான் நம்ம கேப்டன் பாணி....

கேப்டன் கையால் அடித்து பார்த்து இருப்போம்....காலால் உதைத்து பார்த்து இருப்போம்....ஆனால் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தால் அது உலக மகா குற்றமல்லவா?இதோ கேப்டனின் அகில உலகத்தையும் வியக்க வாய்த்த ஒரு சண்டைக்காட்சி....இது சும்மா சாம்பிள்தான்....





எப்பூடி?

04 ஜூன் 2011

உண்ணாவிரதத்தை தொடங்கினார் பாபா....ஊழலே வேண்டாம் போ போ...


ஆயிரக்கணக்கானோருடன் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிரான தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை யோகி பாபா ராம்தேவ் இன்று காலை தொடங்கினார்.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். ஊழலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ராம்தேவ் அறிவித்தார்.

இதை ஆரம்பத்தில் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் ராம்தேவின் போராட்ட அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆதரவும் பெருகியது.


இதையடுத்து இன்றுகாலை திட்டமிட்டபடி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் ராம்தேவ். இதற்காக நேற்றே ஆயிரக்கணக்கானோர் ராம் லீலா மைதானத்தில் குவிந்து விட்டனர்.

அவருடன் பெண் சாமியார் ரிதம்பரா, சீக்கிய, ஜைன மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பு, யோகாசனம் மற்றும் பஜன் ஆகியவற்றை நிகழ்த்தினார் ராம்தேவ். பின்னர் கூட்டத்தினரிடையே அவர் பேசுகையில், நம்மால் முடியாதது ஏதும் இல்லை. எல்லாமே சாத்தியமானதுதான். நாம் தோல்வி அடையப் போவதில்லை. இந்த நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். நாட்டை ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து மீட்க வேண்டும். ஏழைகளிடமிருந்து பசியையும், பட்டினியையும், பஞ்சத்தையும் விரட்ட வேண்டும் என்பதே நமது நோக்கம்.

இங்கு கூடியிருக்கும் யாரும் காசு கொடுத்து கூட்டி வரப்பட்டவர்கள் இல்லை. அனைவரும் தாங்களாகவே வந்துள்ளனர். நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள்தான் இங்கு கூடியுள்ளனர். இந்த போராட்டம் வெல்லும் என்றார்.


மேலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்க வரலாம், ஆனால் மேடையில் வந்து அமரவோ, அதன்மூலம் எனக்கு அரசியல் சாயம் பூசவோ முயலக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் மிகவும் வரவேற்கபடவேண்டிய ஒன்று...ஆனால் இது வெறும் பரபரப்புக்காகவும், விளம்பரத்துக்காகவும் ஆகிவிடக்கூடாது....இதுமாதிரி நம் தமிழ்நாட்டில் இருந்து யாரும் புறப்படாதது வேதனை அளிக்கிறது...

எதிர்கட்சியான பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்த வேறு வழிகள் ,வாய்ப்புகள் இல்லாத நிலையில் இம்மாதிரி போராட்டங்கள் லக்கி ஜாக்பாட்....அவர்கள் இதை தங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவார்களே தவிர தீர்வுக்கு ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதே உண்மை....

அன்னா ஹசாரேவின் போராட்டத்தோடு இதை ஒப்பிட முடியாது....அவர் கோடி கோடியாக சொத்துக்கள் இல்லாதவர்....சமுக சேவைகளில் ஈடுபட்டவர்...ஆனால் பாபாவுக்கு சொத்துக்கள் அதிகம்...கோடிகள் ஏராளம்...

இருந்தாலும் வீதிக்கு போராட வந்தது பாராட்டத்தக்கதே....

ஊழலே போ போ என சொல்லும் பாபாவுக்கு ஆதரவு அளித்து நமது பங்கினை சிறிதளவாவது வெளிப்படுத்துவோம்...

03 ஜூன் 2011

கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து....கேபிள் டிவி அரசுடமை...அதிரவைக்கும் ஆளுநர் உரை....



தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 14வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை அவை கூடியதும் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது உரையை தொடங்கினார்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்....


11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.(அப்ப கல்லூரி மாணவர்களுக்கு?)

- கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.( அதற்கு ஜெயா காப்பீட்டு திட்டம் என பெயர் வைக்காமல் இருந்தால் சரி...)

- விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும்.


- எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை.

- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.( அப்ப ஆடு மாடுலாம் எப்ப?)

- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

- சமச்சீர் கல்வித் திட்டம் செம்மையாக்கப்படும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான பரிந்துரையை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

- சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மைப் பணி.( என்கவுன்டர் லிஸ்ட் ரெடி பண்ணிவிட்டார்களோ ?)

- மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 1000லிருந்து ரூ. 2000 வழங்க உத்தரவு.

- மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 6ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


- மரபு சாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய தனிக் கொள்கை வகுக்கப்படும்.

- 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு தார்ச்சாலகள் அமைக்கபபடும்.

- பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமையாக்கப்படும்...( சன்னுக்கு டின்னு கட்டியாச்சா?)

- சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.


- தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.( அப்துல் கலாம் ஐடியாவா?)

- தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்படும்.

- நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.(இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வலியுறுத்தி கொண்டே இருப்பார்கள்?)


புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதுவரை நடந்த கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும்.( ஒரிஜினல் அம்மா ஸ்டைலை காட்டிவிட்டாரே ஜெ)

- சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக இது 300 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.

- மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.( முதலில் சென்னையில் முடிங்கப்பா...)

ஓகே ஓகே....தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவு செயல்படுத்தி விடுவார் ஜெயலலிதா என மக்களை நம்ப வைக்கும் விதத்தில் ஆளுநர் உரை அமைந்துள்ளது...பார்ப்போம்

02 ஜூன் 2011

சீமான் காதலித்து ஏமாற்றினாரா?


நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார்.

சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் விஜயலட்சுமி நேற்று மாலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திற்கு தென் சென்னை இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக பிரபலமானவர்களை பற்றி இதுமாதிரி புகார்கள் வருவது சகஜம்தான்....ஆனால் புகார் அளித்தவரும் ஓரளவு அறியப்பட்ட நடிகை ஆவார்...இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என இனிதான் பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதும்....சீமான் இன்னும் இதுபற்றி வாய் திறக்கவில்லை....

ஆனால் சீமானின் புகழை கெடுக்கும் வகையில் செயல்பட்ட நடிகை விஜயலட்சுமி மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர இரு‌ப்பதாக ‌அவரது வழ‌க்க‌றிஞ‌ர் ச‌ந்‌திரசேக‌ர‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்...சீமான் திமுகவை எதிர்த்தவர்....அதிமுக ஆட்சி அமைய விரும்பியவர்........ ஒருவேளை இது வேண்டுமென்றே சொல்லப்படும் குற்றச்சாட்டாக இருந்தால் சீமான் கடுமையாக எதிர்த்த திமுக ஆட்சியில் அல்லவா இது நடந்திருக்க வேண்டும்?

பார்ப்போம் சீமான் மீதான இவ்வழக்கு சீறி பாய போகிறதா? அல்லது புஸ்வானமாக போகிறதா என்று....

ஆனால் மீடியாக்களுக்கு இனி நல்ல தீனிதான்...பதிவுலகுக்கும்தான்....

01 ஜூன் 2011

மரியம் பிச்சையை கொச்சை படுத்திய வினவு..


அமைச்சர் மரியம்பிச்சையை பற்றி வினவு எழுதியிருந்த ஒரு பதிவை படித்தேன்....

கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் இறந்தவரை பற்றி எழுதியுள்ளது வினவு....

மரியம் பிச்சை ஒரு ரௌடியாம்....கள்ளசாராயம் காய்ச்சிதான் முன்னுக்கு வந்தாராம்....சப் இன்ஸ்பெக்டர் மனைவியையே கள்ளகாதலியாக வைத்துகொண்டாராம்....

இது மாதிரி விமர்சனங்கள் அரசியல்வாதிகளை பற்றி வருவது இயல்புதான்....அவர் மீதான விமர்சனம் சரியா தவறா என்று பார்ப்பதைவிட இறந்துவிட்ட அதுவும் கோரமான விபத்தில் இறந்து தமிழ்நாடு முழுவதும் அனுதாபத்தை ஏற்படுத்திய ஒருவரை பற்றி இம்மாதிரி தரக்குறைவாக வினவு எழுதலாமா?

இப்போதுள்ள அரசியல்வாதிகளில் தனிப்பட்ட குணாதிசயங்கள் முறையில் பார்த்தால் நல்லவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்....அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு நல்லது செய்தார்களா கெடுதல் செய்தார்களா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர அவரை தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக விமர்சித்தது எந்த விதத்தில் நியாயம்?


திருச்சியில் நேரு குருப்பினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மரியம் பிச்சையின் வெற்றியை தங்கள் வெற்றியாக கருதினார்கள்....திருச்சியில் எந்த இடம் யார் வாங்கினாலும் நேரு குருப்புக்கு கப்பம் கட்ட வேண்டும்....தில்லை நகர் முழுக்க நேரு நகர் ஆகிவிட்டது...நேருவை மிஞ்சி திருச்சியில் யாரும் ஏதும் செய்ய முடியாது...

அப்படிப்பட்ட சர்வபலம் பொருந்திய நேருவை வீழ்த்தி மரியம் பிச்சை அமைச்சரும் ஆகி விட்டதால் இனி அம்மாதிரி நிலைமைகள் ஏற்படாது என பொதுமக்கள் சந்தோசமாக இருந்தனர்...இந்நிலையில் திடிரென விபத்தில் இறந்த மரியம் பிச்சையின் இழப்பை திருச்சி மக்களால் ஜீரணிக்க முடியாமல் கடைகளை அடைத்து துக்கம் கடைபிடித்தனர்.....


அதையும் ஆளும்கட்சியினர் மிரட்டித்தான் செய்யவைத்தனர் என வினவு கூறியுள்ளது மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துவதாகும்....

இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்கள்....வினவு எழுதியது சரியா?

31 மே 2011

தாஜ்மகாலுக்கு போட்டியாக திஹார் சிறை....! (கதம்பம்)


இப்பெல்லாம் காதலுக்கு சின்னமாக யாரும் தாஜ்மகாலை சொல்வதில்லை......திஹார் சிறையைதான் சொல்கிறார்கள்......காரணம் நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்..?ஊருக்கே தெரிந்ததுதானே.....இருந்தாலும் சொல்றேன்.....உண்மையான காதல் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்துவிடுமாம்......இந்த மாதிரி எஸ் எம் எஸ் தான் இப்ப ரொம்ப ஹாட்.....( குறிப்பு....இது எஸ் எம் எஸ் மட்டும்தான்...ஹி ஹி...)

ஸ்பெக்ட்ரம் ராசா சிறையிலிருந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு சிறந்த பேட்மிண்டன் வீரராக வர வாய்ப்பு இருக்கிறது....சிறையில் பேட்மிண்டன் நன்றாக விளையாடுகிறாராம்....இதுதான் தீமையிலும் நன்மை என்பதோ...?

அநேகமாக கூடிய சீக்கிரம் சபாநாயகர் ஜெயகுமார் மாற்றப்படலாம்....பின்னே ஸ்டாலினுடன் ஜெயகுமார் கைகுலுக்கும் காட்சி தினகரனில் பெரியபடமாக வெளியாகி உள்ளதை பார்த்தால் சும்மா இருப்பாரா அம்மா?

நடிகை வனிதாவின் அலப்பறை எப்ப முடிவுக்கு வரும் என தெரியவில்லை....படத்தில் நடித்ததைவிட சிறப்பாகவே கண்ணீர் விட்டு மீடியாக்கள் முன்பு நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.....அட அவரது மகனை அவரிடம் கொடுத்து தொலைத்தால் தான் என்ன? இதை ஒரு இன்டர்நேஷனல் அளவில் சிறப்பு செய்தியாக தினமும் வெளியிடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் வாழ்க......வாழ்க..

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்....புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர்.ஆக இதனால் தெரிவிப்பது என்னவென்றால் புகை நமக்கு பகையாகும்....புகை பிடிக்கும் நண்பர்கள் அதை விட்டுவிட்டால் அவர்களுக்கும்,அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்லது......

30 மே 2011

சிக்கியது லாரி.... விபத்தா ... கொலையா ...?


சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


விபத்தை ஏற்படுத்திய லாரி எங்கே போனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் சல்லடை போட்டு தேடினர்....ஒருவேளை சல்லடை சிறிதாக இருந்ததால் இவ்வளவு நாள் லாரி சிக்கவில்லையோ என்னவோ?

இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட லாரி எது என்பது தற்போது தெரிந்து விட்டது. அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். தூத்துக்குடியிலிருந்து சம்பவ தினத்தன்று ஜிப்சம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் பாடாலூரில் வைத்து அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாக காரணமாகியது. தற்போது இந்த லாரியை போலீஸார் மேற்கு வங்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். லாரியையும், டிரைவரையும் தற்போது தமிழகத்திற்குக் கொண்டு வந்து கொண்டுள்ளனர்.

இந்த லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவராவார். அவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து வரவுள்ளனர்.

அப்போது தெரிந்து விடும் ..இது கொலையா விபத்தா என்று....இந்த லாரியை பிடிக்கவே நம்ம போலீஸ் ஒருவாரம் எடுத்து கொண்டது காவல்துறையின் வெளிப்படையான தோல்வி என நான் எண்ணுகின்றேன்.....நீங்கள்?

நாட்டைவிட நோட்டே பெரிது...!


மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் சச்சின்,டோனி போன்ற மூத்த வீரர்கள் விருப்ப ஒய்வு பெற்றுள்ளனர்....

இவர்களுக்கெல்லாம் நாட்டுக்காக விளையாடுவது மட்டும் கசக்கும்....உடல் ஒத்துழைக்காது...

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் இவர்களுக்கு ஒய்வு வேண்டுமாம்....உங்களை யார் தொடர்ந்து ஐ பி எல் போட்டிகளில் விளையாட சொன்னது? உலக கோப்பை முடிந்தவுடன் ஒரு வார ஒய்வு கூட எடுக்காமல் துள்ளி குதித்து கோடிகளில் கொழிக்கும் ஐ பி எல் போட்டிகளில் விளையாட ஓடிவந்த இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு நாட்டுக்காக விளையாடும்போது மட்டும் ஒய்வு அவசியமாம்...என்ன கொடுமை சார் இது?

ஒய்வு எடுப்பது வீரர்களின் சொந்த விருப்பம்தான்....ஆனால் நாட்டுக்காக விளையாடும் போட்டிகளை உதாசின படுத்திவிட்டு நோட்டுக்காக விளையாடுவதிலே ஆர்வமாக இருப்பது தப்பில்லையா?

அதற்கு பதிலாக ஐ பி எல் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து விட்டு தற்போது இந்திய அணிக்காக விளையாடி இருக்கலாமே?

இந்த வீரர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்த மட்டும் இந்திய அணியின் பெயர் வேண்டுமாம்....

இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக லட்சகணக்கான பேர் தவமிருக்கும் நிலையில் இவர்கள் அணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளது எவ்வளவு பெரிய முரண்பாடு? இவர்கள் இல்லாத நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டு சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் திரும்ப மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பும்போது பலிகடாக்கள் ஆகி அணியை விட்டு வெளியேற்ற படுகின்றனர்....

எனது பார்வையில் இந்த வீரர்கள் ஐ பி எல் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு தற்போது நாட்டுக்காக விளையாடுவதை புறக்கணிப்பது இந்திய அணிக்கு செய்யும் துரோகம்...உங்கள் பார்வையில் என்ன நண்பர்களே?

29 மே 2011

ஆங்கிலத்தில் பொளந்து கட்டிய கேப்டன்...


நம்ம கேப்டன் தமிழ்ல பொளந்து ! கட்டிதான் பெரும்பாலும் நாம் பார்த்து இருப்போம்....ஆனால் அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தவர் என்பது பலரும் அறியாதது....


அவரின் ஆங்கில புலமைக்கு ஒரு சான்றுதான் இது....

28 மே 2011

ஹெல்மெட்....நல்லதா?...கெட்டதா?


இன்று முதல் சென்னையில் இருச்சர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.வரவேற்க படவேண்டிய விசயம்தான்...

இம்மாதிரி உத்தரவுகளுக்கு ஏன் பொதுமக்கள் ஆதரவு அளிப்பதில்லை என எனக்கு வியப்பாக இருக்கிறது....

ஏனென்றால் சென்ற ஆட்சியிலே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. வாகன ஓட்டி தவிர, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அப்போதைய தமிழக அரசு அதிரடி உத்தரவுபோட்டது.

இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. நம்ம ஆளுகளுக்குத்தான் நல்லது சொன்னால் பிடிக்காதே.... நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததையடுத்து, கட்டாய ஹெல்மெட் உத்தரவிலிருந்து அரசு பின்வாங்கியது. மேலும், ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்றும் அறிவித்தது.

தற்போது மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது...

இரு சக்கர வாகன விபத்துகளில் தலையில் அடிபடுவதால்தான் மரணம் ஏற்படுகிறது....ஹெல்மெட் அணிவதால் அத்தகைய வாய்ப்புகள் வெகுவாக குறையும்....

ஆனால் நம்ம மக்கள் பைக்கை ஓட்டுபவர் மட்டும் ஹெல்மெட் போட்டால் போதுமா? பின்னால் உட்காருபவர் அணிய வேண்டுமா? என்று தேவை இல்லாத சர்ச்சைகளை கிளப்பாமல் இதை பின்பற்றினால் நல்லது...ஹெல்மெட் அனைவரும் அணிவதே பாதுகாப்பானது....

மலேசியா ,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லாம் பைக்கில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.....அங்கு எல்லாம் மக்கள் இது போன்ற கேள்விகளை கேட்பதற்கே வேலை இல்லை....

ஹெல்மெட் அணியாமல் செல்வதை காட்டிலும் அணிவது நல்லதா?கெட்டதா?

நல்லது என்றால் அணியத்தானே வேண்டும்....!

நம் உயிரை நாம்தானே காக்க வேண்டும்...?

27 மே 2011

ஜெயலலிதாவின் அடுத்த சறுக்கல்......காரணம் கருணாநிதியின் பாடலா?


சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த கல்வி ஆண்டில் ரத்து செய்தும் .பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் குழுவுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறி வெற்றிகரமாக தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது சறுக்கலை ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா....

தனியார் பள்ளிகளுக்கு வயிற்றில் நெருப்பை வார்த்த சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன?200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை நிறுத்திவிட்டு இப்போது புதிதாக புத்தகங்களை அச்சடிக்க போகிறார்களா? எல்லாம் யாருடைய பணம்?

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடத்திட்டங்கள் மூலம் ஒரே விதமான கல்வி கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே சமச்சீர் கல்வித்திட்டம்...அதை நிறுத்தியதன் மூலம் சாதாரண மாணவர்களின் கல்வி திறன் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்விதிறனோடு சமமாக கூடாது என்ற உயரிய கோட்பாட்டை செயல்படுத்தி உள்ளார் ஜெயலலிதா....


கருணாநிதியின் செம்மொழி பாடலும்,கனிமொழியின் கவிதையும் அந்த புத்தகங்களில் இடம் பெற்று இருப்பதும் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு ஒரு காரணம்...இல்லை இல்லை அதுதான் ஒரே காரணமாகவும் இருக்கலாம்...

தனியார் பள்ளிகள் அடிக்கும் கல்வி கொள்ளைகளுக்கு ஒரு அளவே இல்லை..

சாதாரண L K G வகுப்புக்கே வருட கட்டணமாக 60000 ரூபாய்க்கு மேல்தான் வாங்குகிறார்கள்....

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளைகளை தடுப்பதற்கே திமுக அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது.....இப்போது அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என கூறுவது ஒரு நல்ல அரசுக்கு அழகா?

இனி அந்த குழுவால் எந்த நன்மையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக ஆகிவிட்டது.....தனியார் பள்ளிகள் நிர்ணயிப்பதே கட்டணம் என்ற பகல் கொள்ளைகளுக்கு இனி விடிவு காலமே இல்லாமல் போக போகிறது...

பதவி ஏற்று பதினைத்து நாட்களிலே சில தவறான முடிவுகளால் தனக்கு ஒட்டு போட்ட மக்களை முகம் சுளிக்க வைத்துவிட்டார் ஜெயலலிதா....

இது நன்மைக்கு அல்ல......

26 மே 2011

ஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்?


ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் அஜால் குஜால் சாமியாரான நித்யானந்தாவுக்கும் ஏக போக சந்தோசம்.........

தான் எந்த தவறும் செய்யவில்லையாம்..சென்ற முறை ஆட்சியில் இருந்தவர்கள் தான் அனைத்துக்கும் காரணமாம்....என்ன கொடுமை சார்? நீங்கள் அஜாக்கிரதையாக ஆபாச வீடியோவில் சிக்கியதற்கு அவர்கள் எப்படி காரணமாவார்கள்?பாவம் அவர்களே தோற்றுவிட்டு பரிதாபமாக இருக்கிறார்கள்...நீங்கள் கையும் களவுமாக பிடிபட்ட அந்த வீடியோ காட்சியே பெங்களூரில் உள்ள உங்கள் ஆசிரமத்தில் எடுக்க பட்டதுதானே?

சென்ற முறை திருவண்ணாமலைக்கு வந்தவருக்கு பொதுமக்களும் மற்ற பிற அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து ஆர்பாட்டங்கள் நடத்தின...

ஆட்சி மாற்றம் நடந்த பிறகு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் திருவண்ணாமலைக்கு வந்தவர் தான் எவ்வித தப்பும் செய்யாத மாதிரி பேட்டி கொடுத்துள்ளார்....

ஏதோ அந்த ஆபாசமான அருவெறுப்பான வீடியோ காட்சிகள் சந்துக்கு சந்து சிரித்ததற்கு திமுகவே காரணம் என்பதுபோல பேசியிருக்கிறார்...எல்லா லேப்களிலும் அந்த சி டி பரிசோதனை செய்யப்பட்டு உண்மை என நிரூபிக்க பட்டுள்ளதை ஏற்றுகொள்ளாமல் அது பொய்யான சி டி என இன்னும் இவர் சொல்கிறார் என்றால் தன்னை இந்த மக்கள் இன்னும் நம்புகிறார்கள் ,நம்புவார்கள் என்ற அழுத்தமான நம்பிக்கையே காரணம்....

தனக்கு எதிராக சாட்சி சொல்ல ரஞ்சிதாவுக்கு 20 கோடி பணமும் ,எம் எல் ஏ சீட்டும் தருவதாக ஒரு கட்சி ( திமுகவைத்தான் ) ஆசை காட்டியதாம்...என்னங்கடா இது கூத்தா இருக்கு? நீங்க அடிச்ச மன்மத லீலைகளுக்கு ஆதாரமாகத்தான் நீங்களே அந்த வீடியோவில் இருக்குறீர்களே?அப்புறம் எதற்கு சாட்சி?

அதுமட்டுமில்லாமல் ஒருவேளை தான் தவறு செய்தே இருந்தாலும் அதை தனது மத அமைப்புகளும், மத பெரியவர்களும்தான் கேட்கவேண்டுமாம்..மீடியாக்கள் கேட்க கூடாதாம்.......சாமியார் என்ற பெயரில் அசிங்கம் செய்துவிட்டு அதை மறைக்க மத சாயம் பூசுகிறார்..

நீங்கள் ரஞ்சிதா மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் சந்தோசமாக இருங்கள்...ஆனால் அதற்காக மக்களின் நம்பிக்கையை சாமியார் என்ற பெயரில் சிதைக்காதீர்கள்....

நண்பர்களே ஆன்மீகத்தின் பெயரால் அசிங்கத்தை செய்யும் தனிப்பட்ட நித்யானந்தாவுக்காக மட்டுமே இதை நான் எழுதியுள்ளேன்....

25 மே 2011

ராஜீவ் காந்தியை கொன்றோம்.....ஜெயலலிதாவை கொல்லதிட்டமிட்டோம்....கே பி


புலிகளின் முக்கிய நிதிப் பிரிவுத் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும் இப்போது கொலைகாரன் ராஜபக்சேவின் சிறப்பு விருந்தினருமான கே.பி. இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி....

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள். போரில் நிறைய இழந்துவிட்டோம், இனி நாங்கள் இழப்பதற்கு எதுமில்லை.

எப்போதுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டவர் ஜெயலலிதா. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அவரையும் புலிகள் கொலை செய்திருப்பர். அதற்காக அவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சில சமயம் அவர்களால் வெற்றி பெற முடிந்ததில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளும், தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களை வன்முறைப் பாதைக்குள் தள்ளினார்களா? என்ற கேள்விக்கு கே.பி. பதிலளிக்கையில்,

திராவிட நாடு வேண்டும் என பெரியார் விரும்பினார். அதாவது வடக்கில் இருந்து தமிழகம், கேரளா, ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்றார். இந்த கொள்கையுடன் அவர் அமைப்பைத் தொடங்கினார். அந்த வழியில் வந்தவர்கள் தான் அண்ணாதுரையும், கருணாநிதியும். ஆனால், திராவிட நாடு கோரிக்கை தோல்வி அடைந்தது.

திராவிட இயக்கம் ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதன் கொள்கைகள், பிராமண எதிர்ப்பு சிந்தனைகள் போன்றவை பிரபாகரன் போன்றவர்களுக்கு தலைமுறைகள் கடந்து போய்ச் சேர்ந்து கொண்டு தான் உள்ளன. அந்த வகையில் பிராமண எதிர்ப்பு என்ற நிலையில் தான் தனது கொள்கைகளை வகுத்து செயல்பட்டார் பிரபாகரன்.

இதை வைத்து பிரபாகரனை மாபெரும் ஹீரோவாக்கினர் தமிழக அரசியல்வாதிகள். அவரை பண்டைய பேரரசர்களுடன் ஒப்பிட்டனர். இதனால் தான் பிரபாகரன் தவறுகள் செய்தார். ராஜிவ் காந்தி கொலையும் அது போல நடந்த ஒரு மாபெரும் தவறு தான்...

வைகோ முன்பு திமுகவில் இருந்தார். அவரும் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலரும் எங்களுடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால், கருணாநிதி விடுதலைப் புலிகளை தனது நலனுக்காக அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார் கே.பி.

எல்லாம் சரிதான்?இந்த கே பி இப்பொது யார்? உயிருக்கு பயந்து ராஜபக்சேவின் கைக்கூலியாக மாறி கோழையாக வாழ்வது மட்டுமல்லாமல் புலிகளுக்கும், ஈழ தமிழர்களுக்கும் பச்சை துரோகத்தை செய்தவர்....செய்து கொண்டு இருப்பவர்தான்....

24 மே 2011

ஒண்டிக்கு ஒண்டி வாரியா ? மல்லுகட்டும் முதலமைச்சரும் ,கவர்னரும்


கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கும் ஆளுநர் பரத்வாஜுக்கும் நடக்கும் குடுமிபிடி சண்டைதான் இப்ப இந்தியாவின் ஹாட் காமெடி....

கடந்த ஆண்டு 11 பா ஜ க எம் எல் ஏக்களும் ,5 சுயேச்சை எம் எல் ஏக்களும் கர்நாடக அரசுக்கு ஆதரவை விலக்கிகொண்டனர்...அப்போதிலிருந்தே அங்கு காமெடி கும்பமேலாதான்...சட்டசபையில் பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டிய நேரத்தில் சபாநாயகர் போப்பையா 16 பேரையும் பதவிகளில் இருந்து தூக்கி ஆப்படித்தார்...அதனால் எடியூரப்பா எந்த இடையூறும் இல்லாமல் தப்பித்தார்...

அந்த 16 பேரையும் பதவி நீக்கம் செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது..இதனால் திரும்பவும் எடியூரப்பாவுக்கு சிக்கல் வந்தது...ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 16 பேரும் எடியூரப்பாவை ஆதரிப்பதாக கூறி அந்தர் பல்டி அடித்தனர்...

இந்த நிலையில் கடுப்பான கவர்னர் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த பரிந்துரை செய்தார்...ஆனால் வித்தியாசமாக இந்தியாவில் முதல்முறையாக தனக்கு ஆதரவான எம் எல் ஏக்களை டெல்லிக்கு கூட்டி சென்று ஜனாதிபதி முன்பே பெரும்பான்மையை நிருபித்து கவர்னருக்கும் ,எதிர்கட்சிகளுக்கும் கன்னாபின்னாவென அதிர்ச்சியை ஏற்படுத்தி அதே வேலையில் மக்களுக்கு சிரிப்பையும் ஏற்படுத்தினார் எடியூரப்பா....

இதோட எல்லா சனியனும் முடிந்துவிட்டது என்று பார்த்தால் ஒரு அரசு விழாவில் எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளினார் ஆளுநர்...இப்போது என்னடான்னா சட்டபேரவை கூட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் ஜாலியோ ஜிம்கானா பாடி எடியூரப்பாவை கடுமையாக கடுப்பேற்றி கொண்டு இருக்கிறார்...


சும்மாவா சொன்னார் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லாத ஒன்று என...

இன்னும் என்ன என்ன கூத்துக்கள் ஜனநாயகத்தின் பெயரால் கர்நாடகாவில் அரங்கேற போகிறதோ?

23 மே 2011

ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி கருணாநிதி டெல்லி பயணம்...


இலங்கையில் இனபடுகொலையை அரங்கேற்றிய அசுரன் ராஜபக்சேவை போற்குற்றத்தின் கீழ் கைது செய்து ஐநா சபை விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக கருணாநிதி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்....

இது சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங் ,சோனியா காந்தி ஆகியோரை சந்தித்த கருணாநிதி இலங்கைக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் எந்த உதவியும் செய்யகூடாது என்றும், தமிழக மீனவர்களை சுட்டு கொள்ளும் இலங்கை கடற்படையினர் மீது பதிலுக்கு பதில் இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த மத்திய அரசு உத்தரவு இடவேண்டும் எனவும் வலியுறித்தினார் ......

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் டெல்லியிலே உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளார்...


அட போங்க சார்....இது உண்மையா இருக்குமோன்னு அதிர்ச்சி அடைந்து விட்டீர்களா?


இதெல்லாம் கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு.......நம்ம தாத்தா ஜென்டில்மேன்....அதெல்லாம் செய்யமாட்டார்... நம்ம கருணாநிதி தாத்தாவுக்கு ஒரு தவறும் செய்யாமல் சி பி ஐ பொழுதுபோக்குக்காக கைது செய்த தனது செல்ல மகள் கனிமொழியை சந்திக்கவும், அகில உலக அப்பாவி ஆண்டிமுத்து ராசாவை சந்திக்கவுமே நேரம் பத்தலையாம்....

பாவம் வயதான காலத்துல மகளுக்காக டெல்லி சென்ற கருணாநிதிக்கு பாவப்பட்டதமிழ் மக்களை நினைக்கவா நேரம் இருக்க போகிறது?

22 மே 2011

மஞ்சள் துண்டின் மனசாட்சி பேசுகிறது.....


தியாகி( !!) கனிமொழியின் கைதை பற்றியும், தேர்தல் தோல்வி பற்றியும் மஞ்சள் துண்டு மகாராஜா தொண்டர்களுக்கு எழுதியுள்ள குப்பை ....


தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்?( அட கண்றாவியே...இன்னுமா உங்களுக்கு தெரியவில்லை )

இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் போக விரும்பவில்லை.( கனிமொழியா, பேரன்களா, அல்லது நீங்கள் திரைக்கதை வசனம் எழுதியா படங்களா ? இதை யார் சேர்ப்பார் ?)

இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தைத் தொடர்கிறார்கள்.( உண்மையை சொல்லாமல் இருந்தாதானே தப்பு !)

அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.( மனசாட்சி இல்லாமல் பேசுவது என்றால் இதுதானோ?)

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொண்டபோது, கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்...(இரண்டு கோடிக்கு இருபது சதவீதமா?)

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.(அப்படினா யார்தான் பொறுப்பு ஆவார்கள் ? கலைஞர் தொலைகாட்சியை பார்ப்பவர்களா?)

தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.( அம்மாடி! ஊழல் செஞ்சா சிறைக்கு அனுப்பாம சிம்லாவுக்கா அனுப்புவாங்க !!?)

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.( இது எந்த படத்தில் வரும் அல்லது வரபோகும் வசனம்?)

அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.(இந்த வாய் ( பேச்சு ) மட்டும் இல்லாவிடில் கருணாநிதி என்றோ கரைந்து போயிருப்பார் )

இறுதிப் போரில் வெல்வோம்:( என்ன மகாபாரத போரா.....அட பாவிகளா ! குற்றம் செஞ்சது நீங்க ....தண்டனை அனுபவிப்பது நீங்க ...போருன்னு ஏன் எல்லாரையும் கூப்பிட்டு அக்கப்போர் பண்றீங்க? )இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம்(பாவம் திமுக தொண்டர்கள்....இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி எழுத்துக்களை சகித்து கொள்ள போகிறார்களோ ?) என்று கருணாநிதி கூறியுள்ளார்...

21 மே 2011

பயோடேட்டா : கனிமொழி


பெயர் : கனிமொழி

அடைமொழி : கவிஞர் தியாகி ( சிறைக்கு சென்றதால் ) கனிமொழி

சமிபத்திய அடைமொழி : சிறைக்கு சென்ற செல்ல மகள்..

பலம் : கருணாநிதி

பலவீனம் : கருணாநிதியை தவிர குடும்பத்தினர் அனைவரும்

சாதனை : கருணாநிதி குடும்பத்திலிருந்து சிறைக்கு சென்ற முதல் பெண்மணி

வேதனை : சிறைக்கு வழியனுப்ப யாரும் வராதது

ஸ்பெக்ட்ரம் : ஆப்பு வைத்த ஆட்டோபாம்

சங்கமம் : இனி சங்கு ஊத படப்போகும் அமைப்பு

அழகிரி : அனலை காட்டும் அண்ணன்

ராசா : நெருங்கிய நண்பர் ....வெளியிலும் சிறையிலும்

ஜெகத் கஸ்பர் : அனேகமாக அடுத்து உள்ளே வரபோகும் நபர்

நண்பர்கள் : நீரா ராடியா ,ரத்தன் டாடா ,

எதிரிகள் : கலைஞர் டிவி ,முரசொலி, நக்கீரன் தவிர அனைத்து மீடியாக்களும்

பிடிக்காத எண் :நம்பர் 6

திகார் : உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கும் இடம்

ஜாமீன் : கடலிலே இல்லாத மீன்

திமுக : திருடர்கள் முன்னேற்ற கழகம்

தேர்தல் தோல்வி : ஏதோ தன்னால் மக்களுக்கு செய்ய முடிந்த உதவி

20 மே 2011

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ



டைம்ஸ் பத்திரிக்கை இதழ் வெளியுட்டல்ல முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அவப்பெயர் பெற்ற தலைவர்களில் நம்ம ராசா இரண்டாவது இடம் பெற்று தமிழனின் புகழை உலகறிய செய்துள்ளார்...

இந்தியாவிலே இது மிகப்பெரிய ஊழல் என்றும், இந்த ஊழலால் ராசாவை சேர்ந்த கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது என்றும் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது....

ராங்கா இருந்தாலும் தமிழனனின் பெருமையை, புகழை உலகுக்கு பறை சாற்றிய ராசா ...வாழ்க வாழ்க...

கருணாநிதியை திட்டி திட்டி போரடித்து விட்டதால் ஒரு மாற்றத்துக்காக பக்கத்துக்கு மாநில முதல்வரான ரங்கசாமியை வசை பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா....

பதினைந்து சீட் வென்ற ரங்கசாமி ஐந்து சீட் வென்ற அதிமுக வுக்கு மந்திரிசபையில் இடம் குடுக்காமல் முதுகில் குத்தி விட்டதாம்....வழக்கமாக முதுகில் குத்தும் தனக்கே போட்டியா என கொந்தளித்து உள்ளார் ஜெயலலிதா....

அதிமுக ஆதரவால்தான் ரங்கசாமி ஜெயித்தாராம்....இது எப்படி இருக்கிறது என்றால் சரத்குமார் கட்சியால்தான் தமிழகத்தில் அதிமுக ஜெயித்தது என்று சொல்வது போல இருக்கிறது...

தன்னிடம் சொல்லாமல் ரங்கசாமி பதவி ஏற்று கொண்டாராம்...உங்களிடம் சொலிவிட்டு செய்ய அவர் என்ன அதிமுக உறுப்பினரா?

இவரெல்லாம் மக்களுக்கு என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார் ஜெ..ஹெலிகாப்டரில் செல்லும் உங்களைவிட சைக்கிளில் சென்று மக்களை சந்திக்கும் ரங்கசாமியின் எளிமை ஒன்றே போதும்...அவர் மக்களுக்கு என்ன செய்வார் என்று சொல்வதற்கு....

இப்ப நீங்க முதலமைச்சர் ...பழைய நினைப்பில் ஒன்றரை பக்கத்துக்கு அறிக்கை விடாமல் ஆகுற வேலையை பார்த்தல் நல்லது...

19 மே 2011

ரஜினியை தொந்தரவு படுத்தும் மீடியாக்கள்....


சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால், ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து ரத்த சுத்திகரிப்புக்காக அவருக்கு நேற்று டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

இது இப்போது நான் படித்த செய்தி....அவரின் உடல்நிலையை பற்றி ஏன் ஒரு நாளைக்கு பத்து செய்திகளை வெளியிடுகிறார்கள்?இது அவரையும் அவரின் குடும்பத்தினரையும் எவ்வளவு தூரம் பாதிக்கும்?

மனிதனுக்கு நோய் வருவது இயல்பு....ரஜினி பிரபலமாக இருப்பதால் அவருக்கு நோய்கள் வரக்கூடாதா என்ன?

இதை மீடியாக்கள் ஏன் பெரிதுபடுத்துகின்றன....?மீடியாக்கள் துரத்தி துரத்தி பேட்டி எடுக்கும்போது அவர் மனைவியின் மனநிலை எப்படி இருந்து இருக்கும்..?

நமக்கோ அல்லது நமது உறவினர்களுக்கோ உடல்நிலை சரில்லாமல் இருக்கும்போது ஒரு யாராவது மைக்கை நீட்டி நம்மை பேச சொன்னால் நமக்கு எப்படிஇருக்கும்?

அவரின் மனைவி லதா பேட்டி கொடுத்த போது அவரின் நிலையை அவரின் முகம் உணர்த்தியது...

அவர் குடும்பத்தினர் அவரை கவனிப்பார்களா? இல்லை அவரை பற்றி வரும் செய்திகளுக்கு பதில் சொல்வார்களா?


ரஜினியை பற்றி வீண் வதந்திகளை தவிர்க்க அவரின் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிட்டால் அவரின் ரசிகர்கள் அமைதி காப்பார்கள்....

மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தி அவருக்கும்,அவர் குடும்பத்துக்கும் அவஸ்தைகளை கொடுக்க வேண்டாம் என்பதே என் கருத்து....

ரஜினி விரைவில் குணமடைவார் என நம்புவோம்....


18 மே 2011

நாறிப்போன நாதாரி கட்சிகள்....


நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் திமுகவுக்கு மட்டும் பாடம் புகட்டவில்லை...ஜாதியின் பெயரால் அரசியல் செய்யும் சாக்கடை கட்சிகள், ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் சவுக்கடி கொடுத்துள்ளனர்...


45 சீட் தருபவர்களுடன் தான் கூட்டணி என்று அங்கும் ,இங்கும் மாறி மாறி பேரம் பேசி இன்ப அதிர்ச்சியாக கருணாநிதியிடம் 30 சீட் வாங்கி போட்டியிட்ட ராமதாஸ் அதில் ஒரு பூஜ்யத்தை அழித்துவிட்டு மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்....ஜாதியின் பெயரால் பச்சோந்தி அரசியல் நடத்தும் ராமதாசுக்கு இனி எழுந்து நிற்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள்...

கொ மு க என்று ஒரு கட்சி.....

எந்த கொள்கை ,கோட்பாடுகளும் இல்லாமல் இரண்டு கட்சிகளிடமும் இறுதி வரை பேரம் பேசி திமுக 7 தொகுதிகளை தந்ததால் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது...போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் மக்கள் கொ மு க வுக்கு கும்மாங்குத்து கொடுத்து நாக் அவுட் செய்துள்ளனர்...

இன்னும் நீங்களெல்லாம் என்ன முடிக்கு ( மயிருக்கு ) கட்சி நடத்துகிறீர்கள்?

தெருவுக்கு தெரு நடக்கும் நாய்ச்சண்டைய போல அடித்துகொள்ளும் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்ட63 தொகுதிகளில் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டும் வெற்றியை கொடுத்து மற்ற தொகுதிகளில் ஓட ஓட அடித்து விரட்டி உள்ளனர் மக்கள்..

ஈழத்தமிழர் பிரச்சினைகளில் இரட்டை வேடம் போட்ட திருமாவளவனுக்கு பத்துக்கு பத்து தோல்வியை கொடுத்து மொத்து மொத்துனு மொத்தி விட்டனர் வாக்காளர்கள்...

இந்த மாதிரி சில்லறை கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்த மக்களுக்கு நன்றி நன்றி....

17 மே 2011

முதல் நாளிலே ஆயிரம் கோடியை வீணாக்கிய ஜெ...


முதல்வராக பதவி ஏற்ற அன்றே 1000 கோடி ரூபாயை அலேக்காக தூக்கி வீசி இருக்கிறார் ஜெயலலிதா...

கருணாநிதியால் கட்டப்பட்ட(கருணாநிதி என்ன அவர் சொந்த பணத்தை போட்டா கட்டினார்?) தலைமை செயலகத்துக்கு செல்ல மாட்டேன் என்று கூறி பழைய தலைமை செயலகமான கோட்டையில் பதவி ஏற்றுள்ளார் ஜெயலலிதா...

நாளை அந்த தலைமை செயலகத்தை வேற எதற்காக அரசு பயன்படுத்தினாலும் அது கட்டப்பட்ட நோக்கம் வீண் தானே ?

இதற்க்கு பின்னால் இருக்கும் கண்ணாம்பூச்சி விளையாட்டை கொஞ்சம் பாப்போம்...

அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் முடிவு செய்தார்.

ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக அதற்கு முட்டுக்கட்டை போட்டது...

இந்த நிலையில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை 1000 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கினார்...அது எல்லாம் மக்களின் வரிப்பணம்...

இப்போது ஜெயலலிதா கருணாநிதியின் மீது உள்ள வீம்பு, ஈகோ ,நீ கட்டி நான் என்ன ஆளுவது என்ற போட்டி (ஜெயலலிதா பாணியில் சொன்னால் சபதம் ) போன்றவற்றால் 1000 கோடியை வீணாக்கி உள்ளார்...

அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ? நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு விளையாட?எல்லாம் வியர்வை சிந்தி உழைக்கும் சாமான்ய மக்களின் வரிப்பணம்...

உங்களுக்குள் உள்ள ஈகோ மற்ற கருமாதிக்காக கருணாநிதி வீட்டுக்கு நான் போகமாட்டேன் என்று சபதம் போட்டால் அது நியாயம்...j

அதைவிட்டு விட்டுவிட்டு அவசர அவசரமாக கோட்டையில் இருந்த நூலகத்தை அகற்றிவிட்டு தலைமை செயலகத்தை மாற்றி அமைப்பது எந்த வகையில் நியாயம்..?

மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது ஊழலற்ற ,சீரான சட்டம் ஒழுங்கு கொண்ட நல்லாட்சி மட்டுமே...

இது மாதிரி வீண் சபதங்கள் போட்டு மக்கள் வரிபணத்தை வீணடிப்பது அல்ல...

16 மே 2011

அரை பவுன் தங்கம் இலவசம்.....ஜெயலிதாவின் முதல் கையொப்பம்...


கோட்டையில் முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாலிக்கு 4 கிராம் இலவச தங்கத்தை வழங்கும் திட்டத்தில் கையொப்பமிட்டார்....

மேலும் இளநிலை, டிப்ளோமா படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூபாய் 25000 லிருந்து ரூபாய் 50000 க்கு உயர்த்தி ஆணையிட்டார்... மேலும்


ஏழைகளுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசம் ,


பரம ஏழைகளுக்கு ! மாதம் முப்பத்தி ஐந்து கிலோ அரிசி இலவசம்,


முதியோர் உதவி தொகை 500 லிருந்து 1000 மாக உயர்வு,


மீனவர் உதவி தொகை 1000 லிருந்து 2000 மாக உயர்வு ,

மகப்பேறு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ஆறு மாதம் விடுமுறை போன்ற கோப்புகளிலும் கையொப்பமிட்டார்....


ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.....

ஜெ ..ஜே ..ஆவாரா ???


இன்று பதவி ஏற்கிறார் ஜெயலலிதா....அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்....அதில் 24 பேர் புதுமுகங்கள்....நல்ல முயற்சிதான்.....

பழையவர்களே மீண்டும் மந்திரி ஆனால் ஊழலை கட்டுபடுத்த முடியாது என ஜெயலலிதா நினைத்து இருக்கலாம்...

பதவி ஏற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.....நல்ல விசயம்தான்....கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் இது மிகவும் அவசியமான ஒன்று....ஆனால் வழக்கம்போல தனக்கு வேண்டப்பட்டவர்களை காவல் துறை உயர் பதவிகளில் அமர்த்தாமல் நேர்மையான அதிகாரிகளை அமர்த்தினால் மட்டுமே ஜெ நினைத்ததை சாதிக்க முடியும்...

அடுத்ததாக மின்சார தட்டுபாடு சீர் செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறார்...இது மிக மிக முக்கியமான ஒரு விஷயம்...திமுக தோல்விக்கே காரணமான ஒரு விஷயம்....ஆனால் தற்போதைக்கு இது சாத்தியமாகுமா என்றால் இயலாத விசயம்தான்...பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று..

அடுத்ததாக தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறி இருக்கிறார்....வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடாமல் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொன்னதில் பாதியாவது நிறைவேற்றுவார் என்பதில் ஐயமில்லை....

சென்ற ஜெ ஆட்சியில் மந்திரிகள் நிம்மதியாக தூங்கவில்லை...அவர்கள் பதவியில் இருக்கிறார்களா இல்லையா என்பதை காலையில் செய்தித்தாள்களை படித்துதான் தெரிந்துகொண்டார்கள்....அதுமாதிரி வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மந்திரிகளை மாற்றாமல் அவர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் அவர்களும் தங்களுக்கு செய்தது போக மக்களுக்கும் நல்லது செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்...

ஆனால் ஒன்று...

இதே கருணாநிதி வென்று இருந்தால் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அன்றே அவரை சந்தித்து வாழ்த்து சொல்லி இருப்பார்கள்....அது இன்றி வரை ஜெயலிதாவின் கூட்டணி கட்சிகள் செய்யவில்லை....தலைவர்கள் யாரும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை....ஒருவேளை ஜெயலலிதா நம்மை மதிக்க மாட்டார் என அவர்கள் எண்ணி இருக்கலாம்...

இதுமாதிரி அடுத்தவர்களை ஜெயலலிதா மதிக்கமாட்டார் என்ற எண்ணம் முதலில் மாற வேண்டும்...அதற்கு அவர் இன்னும் கீழே இறங்கி வர வேண்டும்...

அடுத்ததாக சென்ற முறை செய்ததுபோல சில அதிரடி சட்டங்களை ( எஸ்மா,டெஸ்மா,மத மாற்ற தடை சட்டம், )செய்யாமல் இருந்தாலே ஜெக்கு ஜேதான்.....

செய்வாரா ஜெ ?

15 மே 2011

புதிய அமைச்சர்கள் பட்டியல்.....வெளியிட்டார் ஜெயலலிதா...


இது உண்மையான மந்திரிசபை லிஸ்ட் தான்.....ஆனால் இவர்களில் யார் யார் எவ்வளவு நாள் அமைச்சராக இருப்பார்கள் , எப்போது தூக்கப்படுவார்கள் என்பது கிளி சீட்டு எடுப்பது போல ஜெயலலிதா மாற்றி கொண்டே இருப்பார்....

ஜெயலலிதா : முதலமைச்சர்

ஒ பன்னீர்செல்வம் : நிதித்துறை....

செங்கோட்டையன்: விவசாயம்

கே பி முனுசாமி: உள்ளாட்சி துறை

பி தங்கமணி : வருவாய்துறை

நத்தம் விஸ்வநாதன்: மின்சார துறை

வைத்தியலிங்கம் : வீட்டு வசதி துறை

சி வி சண்முகம்: பள்ளி கல்வி துறை

கே வி ராமலிங்கம்: பொதுப்பணித்துறை

கருப்பசாமி : கால்நடைத்துறை

செந்தில் பாலாஜி : போக்குவரத்துத்துறை

சுப்பையா : சட்டத்துறை

வி எஸ் விஜய் : மக்கள் நலவாழ்வுத்துறை

ஆர் பி உதயகுமார் : தகவல் தொழில்நுட்பம்

செல்லூர் ராஜு: கூட்டுறவுத்துறை

மரியம்பிச்சை : சுற்றுசூழல்துறை

சண்முகவேல்:தொழில்துறை

செல்வி ராமஜெயம்: சமுகநலம்

பச்சைமால் : வனத்துறை

சின்னையா : பிற்படுத்த பட்டோர் நலன்


என் சுப்ரமணியன் : ஆதிதிராவிடர் நலன்

கோகுல இந்திரா : வணிக வரித்துறை

பி வி ரமணா : கைத்தறித்துறை

என் ஆர் சிவபதி : விளையாட்டுத்துறை

அக்ரி கிருஸ்ணமூர்த்தி : உணவுத்துறை

பழனியப்பன் : உயர் கல்வி துறை

எஸ் பி சண்முகநாதன் : அறநிலையத்துறை

எம் சி சம்பத் : ஊரக தொழில்துறை

எஸ் பி வேலுமணி : சிறப்பு திட்ட அமலாக்கம்

ஜி செந்தமிழன் : செய்தித்துறை

ஜெயபால் : மீன்வளத்துறை

செல்லபாண்டியன் : தொழிலாளர் நலன்

புத்தி சந்திரன் : சுற்றுலாத்துறை

எடப்பாடி பழனிசாமி : நெடுஞ்சாலை துறை






வேண்டாம்.....வலிக்குது....அழுதுடுவேன்....அடிவேலுவான வடிவேலு...





திமுகவின் தோல்வி குறித்து நேற்று ரூம் போட்டு யோசித்து வடிவேலு கொடுத்த பேட்டி......

ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். (ஹி ஹி...இன்னும் எவ்வளவு பேருடா இதே சொல்ல போறீங்க...)அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.(வாங்குன காசுக்கு மேலே நல்லா கூவுரதுனா இதுதான்...)

அதிமுகவை வைத்துத்தான் விஜயகாந்த் ஜெயித்தார்

தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி.(கண்டு பிடித்துவிட்டார்யா கொலம்பஸ்...) அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.(அப்படின்னா பெரிய கட்சியான திமுகவை வைத்துதான் காங்கிரஸ் கட்சியும், பாமகவும் தோல்வி அடைந்ததா?)

ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். (ஜெயலலிதாவின் அம்மா சந்தியாதான் இறந்துவிட்டாரே...!)

இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.(திரும்ப திரும்ப பேசுற நீ ....)

வெளில வாடா, எத்தனை நாளைக்குடா உனக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் என்று பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால் (வேண்டாம் வலிக்குது......அப்புறம் அழுதுடுவேன்...), உனக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. ஆனால் அது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். என் வீட்டில் புகுந்து அடிப்பதற்கோ, என்னை வெட்டுவதற்கோ, என் வீட்டாரை தாக்குவதற்கோ அவர்கள் தீர்ப்பு கொடுக்கவில்லை. அது தப்பான விஷயம்.

தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்?( ஆமாம் ...செத்த பாம்ப அடிக்குறது சின்ன புள்ள தனமாவுள்ள இருக்கு...)

அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். (சிங்கமுத்து இப்ப உனக்கு மூணு பேரா தெரியுறாரா?)விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்...

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த்தான் முழுப் பொறுப்பும்.( விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தவிர யாரையும் சுட மாட்டார்....டோன்ட் வொர்ரி ...பீ ஹேப்பி....)

எனது வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்புக்கு இருந்தவர்கள் போய் விட்டார்கள். எனது சென்னை வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து மிரடடியுள்ளனர். எனவே எனக்கும், எனது வீட்டாருக்கும் போலீஸார் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வடிவேலு....( பேசாம நா பேசினது எல்லாம் சும்மாச்சுக்கும் விளையாட்டுக்குத்தான் ......அழகிரி சீரியஸா இருந்ததுனால அவரை சிரிக்க வைக்க அது மாதிரி பேசினேன் என்று சொல்லி விஜயகாந்திடம் சரண்டர் ஆக வேண்டியதுதானே....)