21 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள்( பாகம் எட்டு)
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது என்று உறுதியுடன் இருப்பவர் நம்ம ஆளு.....

மாடு மேய்க்கும் வேடத்தில் நடித்தாலும் ஜீன்ஸ், ஷூ போட்டு கொண்டுதான் நடிப்பாரு இந்த சூப்பர் ஹீரோ......

தமிழ் சினிமாவில் பல பேரை உருவாக்கி முன்னுக்கு கொண்டு வந்த தந்தையாக இருந்தாலும் என்னை உங்களால் முன்னுக்கு கொண்டு வர முடியாது என சபதத்தோடு இருப்பவர் ...வேற யாரு

நம்ம மனோஜ்தான்......

வெறும் மனோஜ் என்றால் பல பேருக்கு தெரியாதுதான்....இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வர்தான் மனோஜ்.....

தந்தையின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு ( அப்படி என்றால் என்னங்க) அறிமுகமானார் இவர்....தாஜ்மகால் என்பது படத்தின் பெயர்....உலக புகழ் பெற்ற தாஜ்மகாலின் பெயரை இந்த படத்துக்கு எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை....தாஜ்மகாலில் கரைதான் படிந்தது......

படித்தில் நடிங்க என்று சொன்னால் ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்தது போல படத்தில் வந்து போனார் நம்ம ஹீரோ.....தொடர்ந்து வந்த எந்த படங்களும் ஓடவில்லை....எவ்வளவு படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை...

பாரதிராஜாவின் எந்த அறிமுகமும் சோடை போனது இல்லை.....அதற்க்கு விதிவிலக்கு வேண்டும் அல்லவா....தனது தந்தைக்காக அதை செய்துள்ளார் மனோஜ்....

சிறிது நாட்கள் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருப்பதாக சொல்லி கொண்டு இருந்தார்....சிகப்பு ரோஜாக்கள் படத்தை திரும்ப எடுக்க போவதாக சொல்லி இருந்தார்.....இப்போது என்ன பண்ணி கொண்டு இருக்கிறார் என தெரியவில்லை....


மனோஜ்க்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்று களத்தில் குதித்தவர் இவர்...
தந்தைய போலவே உயரமாக இருந்தாலும் தந்தையை போன்று உயரவில்லை சினிமாவில்...
மம்மி செல்லமா டாடி செல்லமா என்று பாடியவர் ரசிகர்களின் செல்லத்தை பெறாமல் போய்விட்டதில் ஆச்சர்யம்தான்....
சத்யராஜ் மகன் சிபிராஜ்தான் அவர்.....ஸ்டுடென்ட் நம்பர் 1படத்தில் அறிமுகம்...வந்த வேகத்தில் பெட்டியில் சுருண்டது.....பின்பு தந்தையோடு இணைந்து சில படங்களில் நடித்தார்.....அதனால் சத்யராஜ்க்குதான் நஷ்டம்..... சத்யராஜ்க்கும் வாய்ப்பு குறைந்து போனது....
அப்பாவை போலவே வில்லனாகவும் நடித்து பார்த்தார்.....ஒண்ணும் எடுபடவில்லை...


இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.....
இவர்கள் எதனால் காணாமல் போனார்கள் என்று இவர்களின் தந்தைகளுக்கு நிச்சயமாக குழப்பமாக இருக்கும்தான்.... பிரபலங்களின் மகனாகவே இருந்தாலும் தனித்துவமும், திறமைகளும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்பதில் ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை....

8 கருத்துகள்:

 1. மாண்புமிகு மாணவன் படத்தில் ஹீரோவா நடித்தது நம்ம இளைய டாக்டரு விஜய். சிபிராஜ் அறிமுகமானது ஸ்டூடண்ட் நம்பர் 1

  பதிலளிநீக்கு
 2. அட ஏப்பா காணமல் போனவங்க லிஸ்டில் இவர்களையும் சேர்த்தே...அதாவது பீல்டில் ரேசில் இருந்து அதன் பின்னர் அவுட்டானவங்களை பற்றி போடுவேன்னு பார்த்தா...பீல்டுக்கே வராம அவுட்டானவங்களை போட்டுருக்கே....

  பதிலளிநீக்கு
 3. மனோஜ் ஆரம்பத்தில் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக சிறிது காலம் இருந்தார். அந்த நன்றி கடனில் மணி பாரதி என்ற பெயரில் நடித்தார். அதுவும் சரி வரல...அப்புறம் மனோஜ் பாரதி என்ற பெயரிலும் நடித்தார். ஹூஹூம் . சரியா வரல...இப்போது மீண்டும் மனோஜ் ஆகிட்டார்.

  பதிலளிநீக்கு
 4. கூடுதல் தகவலுக்கு நன்றி அண்ணா.....

  பாவம் இதுலயாவது வரட்டுமே...

  பதிலளிநீக்கு
 5. உண்மை தான். திறமையை மட்டும் தான் மக்கள் எதிர்ப்பாக்குறாங்க

  பதிலளிநீக்கு
 6. // மாடு மேய்க்கும் வேடத்தில் நடித்தாலும் ஜீன்ஸ், ஷூ போட்டு கொண்டுதான் நடிப்பாரு இந்த சூப்பர் ஹீரோ.... //

  செம நக்கல்ஸ்... மனோஜ் ஷங்கரின் உதவியாளரா இருக்குறதா கேள்விப்பட்டேன்...

  பதிலளிநீக்கு
 7. //தந்தையோடு இணைந்து சில படங்களில் நடித்தார்.....அதனால் சத்யராஜ்க்குதான் நஷ்டம்..... சத்யராஜ்க்கும் வாய்ப்பு குறைந்து போனது..//
  ha ha ha ! :-)

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....