08 மே 2011

திமுகவே ஜெயிக்கும்...சூப்பர் சுவாமி அடித்த பல்டி...


தேர்தல் முடிவு வெளியாகட்டும். (நீங்களாவது உங்கள் கட்சி வேட்பாளருக்கு ஒட்டு போட்டீர்களா?) பின்னர் அதிமுக உடைந்து போய் விடுவதை தமிழக மக்கள் காண்பார்கள் என்று ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.அவர் அடித்த காமெடி கும்மிகளை பார்ப்போம்.....


ஜெயலலிதாவால் ஒரு வேட்பாளர் பட்டியலைக் கூட சுயமாக தயாரிக்க முடியாத நிலை.(அதற்காகத்தான் ஒன்றுக்கு இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டாரோ?) அதையும் கூட சசிகலாவைக் கேட்டுத்தான் அவர் செய்தார். (கேட்டு செய்வதற்கு அது என்ன சமையல் குறிப்பா?)சசிகலாவிடமே பட்டியல் தயாரி்ப்புப் பணியையும் கொடுத்தார். இப்படிப்பட்டவரால் அரசியலுக்கு எந்த லாபமும் இல்லை.(அரசியலுக்கு யாராலுமே லாபம் இல்லை...அரசியலால் அரசியல்வாதிகளான உங்களுக்குதனே லாபம் சூப்பர் சுவாமி ) அவர் விலக வேண்டும்.(விலகுவதற்கு இது என்ன அரசாங்க வேலையா? இல்ல ஜெயலலிதா கிரிக்கெட் விளையாடுகிறாரா ?) அப்போதுதான் அரசியல் உருப்படும். அதிமுக உருப்படும்.(முதலில் உங்கள் கட்சியை உருப்பேற்ற வழியை பாருங்கள்)

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுக உடைந்து போய் விடும். கூட்டணி குலைந்து போய் விடும். விஜயகாந்த் முதல் ஆளாக வெளியேறி விடுவார்.(ஏன் டாஸ்மாக்குக்கு தாமதமாகிவிடுமா?)

என்னைப் பொறுத்தவரை மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும், ஆட்சி அமைக்கும் என்றார் சாமி..(இதாண்டா அந்தர் பல்டி....)

8 கருத்துகள்:

 1. இது சுவாமிக்கு கை வந்த கலை...

  என்ன செய்வது தமிழக அரசியல் இப்படி இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 2. எத்தனை முட்டை, வெளக்குமாரு வாங்கியும் திருந்தலை சாமி....

  பதிலளிநீக்கு
 3. குறுகிய காலத்தில் பதிவுலகில் நூறு பேர் பின்தொடர்கிறார்கள்...சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. #சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  100 followers. congrats #

  நன்றி நம்பர் 1 பதிவர் அவர்களே....

  பதிலளிநீக்கு
 5. #ரஹீம் கஸாலி சொன்னது…

  குறுகிய காலத்தில் பதிவுலகில் நூறு பேர் பின்தொடர்கிறார்கள்...சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.#

  நன்றி தலைவரே.....முதலில் நீங்கள்தான் பின் தொடர்ந்தீர்கள்....நன்றி....

  பதிலளிநீக்கு
 6. மே 13 எல்லா புதிர்களுக்கு பதிலை வைத்திருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 7. இப்படி பட்ட மனிதர்கள் இருப்பதால்தான் நாம் அவ்வப்போது சிரித்து மகிழ முடிகிறது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....