19 மே 2011

ரஜினியை தொந்தரவு படுத்தும் மீடியாக்கள்....


சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால், ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து ரத்த சுத்திகரிப்புக்காக அவருக்கு நேற்று டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

இது இப்போது நான் படித்த செய்தி....அவரின் உடல்நிலையை பற்றி ஏன் ஒரு நாளைக்கு பத்து செய்திகளை வெளியிடுகிறார்கள்?இது அவரையும் அவரின் குடும்பத்தினரையும் எவ்வளவு தூரம் பாதிக்கும்?

மனிதனுக்கு நோய் வருவது இயல்பு....ரஜினி பிரபலமாக இருப்பதால் அவருக்கு நோய்கள் வரக்கூடாதா என்ன?

இதை மீடியாக்கள் ஏன் பெரிதுபடுத்துகின்றன....?மீடியாக்கள் துரத்தி துரத்தி பேட்டி எடுக்கும்போது அவர் மனைவியின் மனநிலை எப்படி இருந்து இருக்கும்..?

நமக்கோ அல்லது நமது உறவினர்களுக்கோ உடல்நிலை சரில்லாமல் இருக்கும்போது ஒரு யாராவது மைக்கை நீட்டி நம்மை பேச சொன்னால் நமக்கு எப்படிஇருக்கும்?

அவரின் மனைவி லதா பேட்டி கொடுத்த போது அவரின் நிலையை அவரின் முகம் உணர்த்தியது...

அவர் குடும்பத்தினர் அவரை கவனிப்பார்களா? இல்லை அவரை பற்றி வரும் செய்திகளுக்கு பதில் சொல்வார்களா?


ரஜினியை பற்றி வீண் வதந்திகளை தவிர்க்க அவரின் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிட்டால் அவரின் ரசிகர்கள் அமைதி காப்பார்கள்....

மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தி அவருக்கும்,அவர் குடும்பத்துக்கும் அவஸ்தைகளை கொடுக்க வேண்டாம் என்பதே என் கருத்து....

ரஜினி விரைவில் குணமடைவார் என நம்புவோம்....


18 கருத்துகள்:

 1. தன்னுடைய வியாபாரத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் இவர்கள்.

  பதிலளிநீக்கு
 2. இப்ப மீடியாக்கள் இப்படி கிளமிட்டாங்க பாஸ் , ஒரு மனித நேயம் வேண்டாம் .
  இதுனால நான் பிரபலம் ஆக விரும்பவில்லை ஹி ஹி

  பதிலளிநீக்கு
 3. குணமடைய பிரார்ர்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 4. என்னயயும் மீடியாக்காரங்க தொந்தரவு பண்றாங்கப்பா...

  பதிலளிநீக்கு
 5. பிரபலமானாலே இது தான் பிரச்சனை போலிருக்கிறது பாஸ் ஹிஹி

  பதிலளிநீக்கு
 6. ஒட்டு போட்டிடன்..வரட்டா

  பதிலளிநீக்கு
 7. #பாலா சொன்னது…

  தன்னுடைய வியாபாரத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் இவர்கள#

  சரியா சொன்னீங்க....நன்றி...

  பதிலளிநீக்கு
 8. #ரியாஸ் அஹமது சொன்னது…

  இப்ப மீடியாக்கள் இப்படி கிளமிட்டாங்க பாஸ் , ஒரு மனித நேயம் வேண்டாம் .
  இதுனால நான் பிரபலம் ஆக விரும்பவில்லை ஹி ஹி #


  ஹி ஹி....பிரபலம்னாலே பிரச்சினைதான்...

  பதிலளிநீக்கு
 9. ஹி ஹி அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா


  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
  இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

  நாமே ராஜா, நமக்கே விருது-7

  http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

  பதிலளிநீக்கு
 10. #ரஹீம் கஸாலி சொன்னது…

  நல்ல பதிவு #

  நன்றி தலைவரே..

  பதிலளிநீக்கு
 11. #மைந்தன் சிவா சொன்னது…

  ஒட்டு போட்டிடன்..வரட்டா #

  வாங்க பாஸ்...பிரபலமா இருந்தாலே பிராபலம்தானே ...ஹி ஹி...அடிக்கடி வந்துட்டு போங்க....நன்றி...

  பதிலளிநீக்கு
 12. எறியும் வீட்டில் பிடிங்கின வரை லாபம் என அணைத்து மீடியாக்களும் பத்திரிக்கை களும் இந்த விஷயத்தை பரபரப்பாக்கி காசு பார்கின்றனர். ஒரு பிரபலமான மனிதர் என்பதற்காக அவரையும் அவர் குடும்பத்தாரையும் இந்த மீடியாக்கள் இப்படி கொடுமை படுத்த தேவை இல்லை. உடல் நலம் குறைந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது அனைவருக்கும் நிகழும் ஒன்று. ரஜினியின் சிகிச்சைகள் குறித்து இந்த ஊடகங்கள் ஆடும் ஆட்டம் மிக அசிங்கமாக உள்ளது. திருந்தவே மாட்டார்களா?

  பதிலளிநீக்கு
 13. ok...ok... இப்ப தான் உங்கள் வலைப்பூவை பார்த்தேன். இனி தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 14. ரஜினி விரைவில் குணமடைவார் என பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. நன்றி சர்புதின் சகோ....நான் உங்களிடம் மார்க் எதுவும் கேட்கவில்லை....நான் எழுதுவதை மட்டும் சுட்டி காட்டினால் மகிழ்ச்சி அடைவேன்...இதையே நீங்கள் உங்கள் டெம்ப்ளேட்டை மாற்றினால் நல்ல இருக்கும் என்று சொன்னால் நான் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வேன்...அதை விட்டு விட்டு எனக்கு மார்க் போட நீங்கள் யார்?எனக்கு மார்க் போடும் அளவுக்கு நீங்கள் பெரிய ஆளும் அல்ல....உங்களிடம் மார்க் கேட்கும் அளவுக்கு நான் எழுத்தால் சிறிய ஆளும் அல்ல...

  பதிலளிநீக்கு
 17. ரஜினி தாமாக வளரவில்லை...ரசிகர்கள் மீடியாக்கள் என்ற ஏணியில் ஏறித்தான் புகழின் உச்சிக்குச் சென்றார்.

  அந்த மாதிரியான வரவேற்பும் உந்துதலும் தரப்படும் பொழுது மகிழ்ந்தவர் இப்பொழுது இது போன்ற அன்பு இடர்களையும் தாங்கித்தான் ஆக வேண்டும்.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....