18 ஜனவரி 2011

பயோ டேட்டா: விஜயகாந்த்...


பெயர்: விஜயகாந்த்....

அடைமொழி: கேப்டன் விஜயகாந்த் ( எந்த கப்பலுக்கு கேப்டன், எந்த டீமுக்கு கேப்டன் என்றெல்லாம் கேட்ககூடாது.....)

தொழில்: சினிமாவில் வில்லன்களை அடிப்பது.அரசியலில் தலைவர்களை கன்னாபின்னா என திட்டுவது.....

பதவி: தே மு தி க தலைவர்...

கல்யாண மண்டபம்: இடிப்பதற்காகவே கட்டப்பட்டது....

சாதனை: இதுவரை கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தல்களை சந்தித்தது.....

வேதனை: அப்படி சந்தித்த எல்லா தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தது.....

சோதனை:வரிசையாக படங்கள் மண்டையை போட்டது...

பிடித்த வார்த்தை: அடுத்த முதலமைச்சர்....

பிடிக்காத வார்த்தை: இன்றைய முதலமைச்சர்....

பிடித்த மொழி: டமில் ( தமிழ் தான்...)

கருணாநிதி: கரையான் புற்றுக்குள் புகுந்த பாம்பு.....

ஜெயலலிதா: குடிகாரன் என்று சொன்னாலும் கூட்டணிக்கு ஏற்றவர்.....

திமுக: குடும்ப அரசியலுக்காகவே நடத்தபடுவது.....

தே மு தி : தன்னுடைய மனைவி,மச்சான் எல்லாம் கட்சியில் முக்கிய பதவியில் இருந்தாலும் மக்களுக்காகவே நடத்தப்படும் ஜனநாயக கட்சி...

கனவு:" கருப்பு " எம் ஜி ஆர் ஆவது...

லட்சியம்: தமிழ்நாட்டின் நிரந்தர( மில்லாத ) முதலமைச்சர்....

23 கருத்துகள்:

 1. விருத்த கிரி வெற்றிப்படைப்பு தானே...

  பதிலளிநீக்கு
 2. மொத்தத்தில் நல்ல கலாய்ப்பு...

  பதிலளிநீக்கு
 3. bio data மன்னன் அதிரடி ஹாஜா வாழ்க.

  பதிலளிநீக்கு
 4. கலக்கலான பயோ டேட்டா எழுதுவதில் நண்பர் கே.ஆர். பி.செந்திலுக்கு அடுத்து நீதான். கலக்குறே ஹாஜா. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. //தொழில்: சினிமாவில் வில்லன்களை அடிப்பது.அரசியலில் தலைவர்களை கன்னாபின்னா என திட்டுவது.....///

  இது மட்டும்தான்

  பதிலளிநீக்கு
 6. #பாரத்... பாரதி... சொன்னது…

  விருத்த கிரி வெற்றிப்படைப்பு தானே...#


  ஹி ஹி இந்த நெனப்பு வேற இருக்கா உங்களுக்கு?

  பதிலளிநீக்கு
 7. #ரஹீம் கஸாலி சொன்னது…

  கலக்கலான பயோ டேட்டா எழுதுவதில் நண்பர் கே.ஆர். பி.செந்திலுக்கு அடுத்து நீதான். கலக்குறே ஹாஜா. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.#

  நன்றி அண்ணா.....

  பதிலளிநீக்கு
 8. #இனியவன் சொன்னது…

  bio data மன்னன் அதிரடி ஹாஜா வாழ்க#

  நெசமாவா சொல்றிங்க....நன்றி நன்றி.....

  பதிலளிநீக்கு
 9. //கேப்டன் விஜயகாந்த் ( எந்த கப்பலுக்கு கேப்டன், எந்த டீமுக்கு கேப்டன் என்றெல்லாம் கேட்ககூடாது.....)//

  கேவலத்துக்கெல்லாம்
  அது கேப்டன்!

  //சினிமாவில் வில்லன்களை அடிப்பது//

  உன் வீரம் தெரியாதா?
  கற்பழிப்பு முதலிரவுக் காட்சி தவிர
  மற்றதெல்லாம் டூப்பு!

  //தே மு தி க தலைவர்...//


  புண்பட்ட உன்மூஞ்சிக்கு
  சின்ன கவுண்டரே
  சுத்திப் போட வேணுமடா
  ரெண்டு சிலிண்டரே

  //இடிப்பதற்காகவே கட்டப்பட்டது....//


  அடிக்கடி
  கைக்காசு செலவு செய்து
  கட்சி நடத்துவதாய்
  கஷ்டப்படும் விசயகாந்தே
  பேசாமல் சொந்த ஊரிலேயே
  சில கக்கூசுகளைக் கட்டி
  கைக்காசு பாரேன்!
  சிலரின் முக்கியப் பிரச்சனைக்கு
  ஒரு முடிவாவது கிடைக்கும்!

  நண்பரின் பயடேட்டாவுக்கு என்னுடைய copy paste விளக்கவுரை

  பதிலளிநீக்கு
 10. // ஜெயலலிதா: குடிகாரன் என்று சொன்னாலும் கூட்டணிக்கு ஏற்றவர்..... //

  குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சொன்னது சரியாத்தான் இருக்கு...

  பதிலளிநீக்கு
 11. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே.....

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. கலக்கல் நண்பா !!! ரசித்து சிரித்து படித்தேன்..
  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  பதிலளிநீக்கு
 14. Haidar Ali maathiri aalungal irukkum varai inthiyaa munnera vazhiye illai. haidar pondravargalum naattil irukkiraargale yenbatharkkaaga vetkapadukiren. ungalukku thairiyam irunthaal ungal pugaipadathudan karuthidavum. antha thairiyam kooda illaatha unakku captanai paarthu peasa yenna thaguthi irukkirathu. avar neradiyaaga aalum katchiyai yethirkkiraar aanaal neengal olinthukondu avarai yesukireergal.

  பதிலளிநீக்கு
 15. traffic yegira vendum yenbatharkkaaga yethai vendumaanaalum yezhutha ninaikkum pathivargal irukkum varai blogger verum pozhuthupokku thalamaagave irukkum.(ungalaium serthu). muthalil ungaludaiya samuthaaya kadamaiyai seiungal. matravargalai punpaduthi athilirunthu santhosamadaipavan manithan alla mirugam. neengal manithana mirugamaa?

  பதிலளிநீக்கு
 16. anbu said.......ungalukku thairiyam irunthaal ungal pugaipadathudan karuthidavum. antha thairiyam kooda illaatha unakku captanai paarthu peasa yenna thaguthi irukkirathu///
  கண்டுபிடிச்சுட்டாருய்யா கொலம்பசு....அவரு மட்டும் என்னவாம் சிரிச்ச முகத்தோட போட்டோவா வச்சிருக்காரு அவரோ ட புரபைல........அ.தி.மு.க ஆதரவாக வரும் பத்திரிக்கை செய்திகளை அப்படியே காபி பேஸ்ட் செய்து வெளியிடுவதற்கு ஒரு வலைப்பூ வச்சிருக்காரு...ஜெயலலிதா வீட்டு நாயை திட்டினாலும் அன்பு மாதிரி ஆளுங்க வரிஞ்சு கட்டிக்கு வருவாங்க...எதுக்கு இப்ப இவ்வளவு கோவப்படுறிய.....கலைஞரை பத்தி ஒரு பயோ டேட்டா கூடத்தான் வந்திருக்கு...அத பார்த்து சிரிச்சுட்டு போன நீங்க விஜயகாந்த பத்தி எழுதும் போது மட்டும் கொவப்படுறியலே இது எந்த ஊரு நியாயம்?
  உங்க தளத்தை முதல்ல பாருங்க...கலைஞரை திட்டி எத்தன பதிவு போட்டுருக்கீங்கன்னு....மத்தவங்க மனச புண்படும்படி எழுதுறவன் மிருகம்னா நீங்க யாரு?

  பதிலளிநீக்கு
 17. அன்புதாசன் அவர்களே....நாகரிகமாக எழுதும் நான் மனிதன்தான்....ஆனால் அநாகரிகமாக உங்கள் கருத்தை பதிவு செய்த நீங்கள்தான் மிருகம்.....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....