20 ஜனவரி 2011

பயோ டேட்டா: சீமான்


பெயர் : சீமான் ( கவரிமான் அல்ல )

தொழில்: சினிமா ,அரசியல்....

உபதொழில்: இனவெறியை தூண்டும்படி பேசுவது

பொழுதுபோக்கு: கண்டபடி வன்முறையை தூண்டும்விதமாக பேசி ஜெயிலுக்கு போவது....

தேசிய ஒருமைப்பாடு: காற்றில் பறக்க விட வேண்டியது.....

இந்தியா: துண்டாட பட வேண்டிய தேசம்.....

கருணாநிதி: ஈழம் சுடுகாடு ஆனதற்கு துணை போனவர்....

ஜெயலலிதா: பிரபாகரனை அழிக்க வேண்டும் என்று கூறியவராக இருந்தாலும் இப்போது தேனாய் இனிப்பவர்...

காங்கிரஸ்: தமிழகத்தில் இருக்க கூடாத கட்சி....

திமுக: ஆட்சியில் இருக்க கூடாத கட்சி.....

அதிமுக: அடுத்தமுறை ஜெயிலுக்கு போகாமல் இருப்பதற்காக ஆட்சிக்கு வரவேண்டிய கட்சி...

சாதனை: விடுதலைப்புலிகள் மற்றும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக பேசி அந்த ஆதாயத்தினால் இயக்கம் ஆரம்பித்தது...

வேதனை: ஜெயலலிதாவை ஆதரிப்பதாக சொல்லி சுயரூபத்தை வெளிக்காட்டி
சிக்கலில் மாட்டிகொண்டது....

சோதனை: நாவை அடக்காமல் பேசுவதால் வருவது....

கொள்கை: அப்படி எல்லாம் ஒரு மன்னாங்கட்டியும் இல்லை....

லட்சியம்: போரினால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய ஜெயலிதாவை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்ப்பது....

20 கருத்துகள்:

  1. சீமான் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அவரது சமீபத்திய நிகழ்வுகள் பிடிக்கவில்லை..
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  2. அருமையான பயோ டேட்டா. தொடரட்டும் அதிரடி(ஹாஜாவின் ) பயோ டேட்டாக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அதிமுக: அடுத்தமுறை ஜெயிலுக்கு போகாமல் இருப்பதற்காக ஆட்சிக்கு வரவேண்டிய கட்சி.../////
    இது ஏற்புடைய கருத்தல்ல.....ஜெயலலிதா மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் புலிகள் பற்றி சீமான் பேசவே முடியாது. மீறி பேசினால் பொய்கோ போல...மன்னிக்கவும் வைகோ போல பொடாவில் உள்ளிருக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  4. என்ன இருந்தாலும் ஒரு மகான இப்படி பேசுறததுக்கு என்னோட கண்டனங்கள்! - ஹி ஹி

    ஐயோ கொல்றாங்களே!

    பதிலளிநீக்கு
  5. சீமான் ...கவரிமான் இல்லை
    he is not a gold fish he is a selfish

    பயோ டேட்டா பயணம் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  6. //பெயர் : சீமான் ( கவரிமான் அல்ல )// ஆரம்பமே டாப்பு

    பதிலளிநீக்கு
  7. //சீமான் ( கவரிமான் அல்ல )//

    ஹா...ஹா...ஹா...

    ஆரம்பமே அமர்க்களம்

    பதிலளிநீக்கு
  8. அவரை பெரிய ஆள் ஆக்கியதும் மீடியா தான் இன்று அவரை பந்தாடுவதும் மீடியாதான். மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர் இன்னும் அரசியலில் முதிர்ச்சியடையவில்லை. அதற்க்கு முன் தனது ஆவேச பேச்சால் பிரபலமானார். முரண்பட்ட பேச்சால் பந்தாடப்படுகிறார்.

    பதிலளிநீக்கு
  9. #sakthistudycentre-கருன் சொன்னது…

    சீமான் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அவரது சமீபத்திய நிகழ்வுகள் பிடிக்கவில்லை..#

    அதுதான் எனக்கும் பிடிக்கவில்லை.....

    பதிலளிநீக்கு
  10. #இனியவன் சொன்னது…

    அவரை பெரிய ஆள் ஆக்கியதும் மீடியா தான் இன்று அவரை பந்தாடுவதும் மீடியாதான். மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர் இன்னும் அரசியலில் முதிர்ச்சியடையவில்லை. அதற்க்கு முன் தனது ஆவேச பேச்சால் பிரபலமானார். முரண்பட்ட பேச்சால் பந்தாடப்படுகிறார்.#


    நீங்கள் சொல்வதும் உண்மைதான்....

    பதிலளிநீக்கு
  11. பாவம் சீமான். பகட காய் ஆக்கிவிட்டார்கள். வை கோ போன்ற கிரிமினல்கள் இவரை தூண்டி விட்டு, ரசித்து கொண்டுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  12. // ஜெயலலிதா: பிரபாகரனை அழிக்க வேண்டும் என்று கூறியவராக இருந்தாலும் இப்போது தேனாய் இனிப்பவர்... //

    // அதிமுக: அடுத்தமுறை ஜெயிலுக்கு போகாமல் இருப்பதற்காக ஆட்சிக்கு வரவேண்டிய கட்சி... //

    இந்த இரண்டுமே செம சூப்பர்...

    பதிலளிநீக்கு
  13. பெயர் :அதிரடி ஹாஜா ....
    தொழில் : மற்றவர்களை command அடித்து Biodata போடுவது
    மன்னிக்கவும் தனி ஒரு மனிதன் ஈழ மக்களுக்காக போராடும் பொழுது அதற்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு இப்படி ஒரு பதிவை போடலாமா...

    பதிலளிநீக்கு
  14. இப்படியெல்லாம் எழுதி தான் உன்னோட மொக்க
    பதிவு போநியாகனும் ,ஒருத்தனாவது துணிந்து
    பேசுகிறாரே என்று உமக்கெல்லாம் பெரிய
    வருத்தம் ,வேதனை .

    பதிலளிநீக்கு
  15. அறிவுகெட்டசுப்ரா நாவை அடக்கி கொள்ள கற்று கொண்டு விட்டு அப்புறம் கருத்து சொல்ல வாருங்கள்....வந்துட்டாரு பெருசா..போயா போ ..சந்தர்ப்பவாதி சீமானுக்கு போயி கூழை கும்பிடு போடு....

    பதிலளிநீக்கு
  16. #Siva சொன்னது…

    பெயர் :அதிரடி ஹாஜா ....
    தொழில் : மற்றவர்களை command அடித்து Biodata போடுவது
    மன்னிக்கவும் தனி ஒரு மனிதன் ஈழ மக்களுக்காக போராடும் பொழுது அதற்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு இப்படி ஒரு பதிவை போடலாமா...#



    சீமானின் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் நான் பதிவு இட்டுள்ளேன்.....இனத்தின் பெயரால் நாட்டை துண்டாட விரும்பும் சீமானின் இனவெரியைதான் நான் பதிவிட்டுள்ளேன்....

    பதிலளிநீக்கு
  17. இப்பதிவு வேதனையாக இருக்கின்றது. சந்தர்ப்பவாத அரசியல் என்று கூறுகின்றீர்களே.. அப்படி என்ன ஆதாயம் அடைந்தார் என்று தங்களால் கூற முடியுமா? அரசியலில் முதிர்ச்சி இல்லாததால் அவரின் கருத்துக்கள் சில நேரங்களில் முரணாக இருக்கலாம். ஆனால் அவரின் நோக்கம் பிழைப்புவாத அரசியலை நோக்கியதல்ல. தமிழுக்கு, தமிழனுக்கு என்றாலே இனவெறி என்கின்றீர்களா, இந்திய வல்லரசில் இந்தியக்குடிமகனான தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் சித்ரவதை செய்வதையும் கொல்வதையும் கண்டு மரத்துப் போய் இருப்பது தான் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தமையா?! பாதிக்கப்ப்டுவோரின் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் போது தான் அவ்வலி தெரியும். நீங்களும், நானும் போராட விரும்பாத அல்லது இயலாத நிலையில், அப்பணியில் ஈடுபட முனைவோரை நாம் கேலிக்குட்படுத்துவது சரியல்ல. -- நெல்லி, மூர்த்தி. nellimoorthy.blogspot.com

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....