26 ஜனவரி 2011

பொங்கல் படங்களின் வசூல்...ஜெயித்தது யாரு?

வலைப்பதிவு நண்பர்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....

நம்ம டாக்குடரின் படம் பொங்கல் ரேசில் சறுக்கி விட்டது.....படம் ஓரளவு நல்ல இருந்தாலும் முந்தைய படங்களின் தோல்விகளால் மக்கள் இப்பவும் டாக்டரின் படத்துக்கு போக தயங்குகின்றனர் என்பதையே இது காட்டுகிறது...

பொங்கல் ரேசில் சிறுத்தை ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.....

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வார இறுதியில் ஆடுகளத்தை இரண்டாமிடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது, கார்த்தியின் சிறுத்தை. வெளியானது முதல் மூன்றாவது இடத்திலேயே உள்ளது விஜய்யின் காவலன்.

காவலன் சென்ற வார இறுதியில் 47.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த சென்னை வசூல், 1.51 கோடி.

இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆடுகளம் சென்ற வார இறுதியில் 49.07 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான ஆடுகளத்தின் சென்னை வசூல், 1.70 கோடி.

சிறுத்தை சென்ற வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 62.51 லட்சங்கள். காவலன், ஆடுகளம் இரண்டையும்விட மிக மிக அதிகம். இதுவரையான சிறுத்தையின் சென்னை வசூல், 1.98 கோடி.

சென்ற வார இறுதி வசூலில் மட்டுமில்லாது மொத்த வசூலிலும் விஜய்யின் படம் பின்தங்கியே உள்ளது. பாக்ஸ் ஆஃபிஸின் நான்காவது இடத்தை இளைஞனும், ஐந்தாவது இடத்தை மன்மதன் அம்பும் பிடித்துள்ளன.

15 கருத்துகள்:

 1. நல்லா தகவல் சொல்லி இருக்கீங்க! ஆமா அண்ணனுக்கு விஜய் னா பிடிக்காதோ?

  பதிலளிநீக்கு
 2. Nice,ஓட்டு போட்டுட்டு கிளம்பியாச்சு...

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. Intha padhivula comment potrukkura Dr.roda fan oruthar kavalanthaan meha hitnu adichu solrare.avar solra karanangalum otthukura maathirithaan irukku boss. விழியே பேசு...: பின்தங்கினான் காவலன் :சென்னை பாக்ஸ்ஆபீஸ் ரிப்போர்ட் தற்போதய நிலவரம்
  http://vizhiyepesu.blogspot.com/2011/01/blog-post_3021.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FiTCBv+%28%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81...%29

  பதிலளிநீக்கு
 6. என்ன வசூலாகி என்ன பண்ண?
  அதுல பாதி நமக்கா கொடுத்துட போறாங்க? ;)

  பதிலளிநீக்கு
 7. நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் (தயாரிப்பாளர்களுக்கு நல்ல விஷயம் )

  பதிலளிநீக்கு
 8. சரி..நண்பா இதுக்கெல்லாம் வருமான வரி கட்டினார்களா ?

  பதிலளிநீக்கு
 9. இவையெல்லாம் அதிகாரப்பூர்வ தகவல்களா...? காவலன் படம் மெதுவாக வேகமெடுக்கும் என்று விஜய் ரசிகர்கள் சூடமடித்து சத்தியம் செய்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
 10. Kavalan

  No. Weeks Completed: 1
  No. Shows in Chennai over this weekend: 221
  Average Theatre Occupancy over this weekend: 95%
  Collection over this weekend in Chennai:Rs.47,90,030
  Total collections in Chennai: Rs. 1.51 Crore

  Aadukalam

  No. Weeks Completed: 1
  No. Shows in Chennai over this weekend: 271
  Average Theatre Occupancy over this weekend: 90%
  Collection over this weekend in Chennai: Rs. 49,07,151
  Total collections in Chennai: Rs. 1.70 Crore


  Siruthai

  No. Weeks Completed: 1
  No. Shows in Chennai over this weekend: 293
  Average Theatre Occupancy over this weekend: 91%
  Collection over this weekend in Chennai: Rs. 62,51,323
  Total collections in Chennai: Rs. 1.98 Crore

  மூலம்: behindwoods.com

  கடந்த வார இறுதி சராசரி திரையரங்க மக்கள் வருகையைப் பார்த்தால், காவலனுக்கு (95%) மற்ற இரு படங்களை விட அதிகம்.
  அதே நேரம் கடந்த வார இறுதி திரையிடல்களின் எண்ணிக்கை(221) மற்ற இரு படங்களை விட மிகக் குறைவு. ஆகவே, மொத்த வசூல் குறைந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
  இவை திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான விடயம்.
  இதுதான், தற்போதய நிலவரம்.

  அனேகமாக 3 படங்களுமே ஓரளவுக்காவது வெற்றி பெறும் போல்தான் தெரிகிறது. பாரப்போம்.

  கீழேயுள்ள இணைப்புகளையும் ஒருமுறை பார்க்கவும்.

  http://thatstamil.oneindia.in/movies/specials/2011/01/vijay-s-kaavalan-declared-as-super-aid0091.html

  http://www.sify.com/movies/vijay-s-kaavalan-is-a-hit-news-tamil-lbzkgaadefh.html?scategory=tamil

  பதிலளிநீக்கு
 11. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு
 12. என்னப்பா இது என்ன வச்சி காமடி பண்றதே உங்க வேலையா போச்சி, படம் ஹிட்டானாலும் காமடி பண்றீங்க....

  - இப்படிக்கு விஜய்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....